
திருச்சி மரக்கடையில் நடிகர் விஜய் தனது தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கிய நிகழ்வு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த எதிர்பார்ப்பு, விஜய் ரசிகர்களின் கட்டுப்பாடற்ற ஆர்வத்தால், பயணத்தின் தொடக்கத்திலேயே பெரும் சவாலாக மாறி இருந்தது.
ஆனால் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலான பயணத்தை முடித்து விஜய் மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை முன்பு வந்தடைந்தார்.
வணக்கம் எனக்கூறி பிரச்சாரத்தை துவங்கிய “போருக்கு போகும் முன்னாடி..போரில் ஜெயிக்க குல தெய்வம் கோயிலுக்கு போய்ட்டுதான் போவாங்கலாம்..அந்த மாதிரி..அடுத்த வருடம் நடக்க போகிற போரில் ஜெயிக்க இங்கிருந்து துவங்குகிறேன். அடுத்த ஆண்டு நடக்கப்போகும் ஜனநாயக போருக்கு முன் மக்களை சந்திக்க வந்துள்ளேன். திருச்சியில் துவங்கிய எல்லாமே திருப்புமுனையாக அமையும்னு சொல்லுவாங்க..அந்த காலத்துல அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜிஆர் எல்லாருமே தங்கள் முதல் அரசியல் பயணத்தை இங்குதான் துவங்கினார்கள். பெரியார் வாழ்ந்த இடம், கல்விக்கு பெயர் போன இடம் மதச்சார்பற்ற, மதநல்லிணக்கம் நிறைந்த இடம் திருச்சி. இந்த திமுக அரசு கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றவில்லை. மை டியர் சி.எம் சார்..! இந்த சத்தம் கேக்குதா…? நெசவாளர்களின் வட்டியை 8% குறைப்போம் என்றீர்களே? செய்தீர்களா? நீட் தேர்வை ஒழிப்போம்னு சொன்னிங்களே? செஞ்சீங்களா?தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றினீர்களா? எதையுமே செய்யவில்லை” என அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே தொழில்நுட்ப கோளாறால் மைக் வேலை செய்யவில்லை. பேச்சை புரிந்துகொள்ளமுடியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.