“ஜோசப் விஜய் எனும் நான்” - நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்கும் தவெக தலைவர்! தமிழகத்தில் தொடங்கியது விசில் புரட்சி..

யாருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விஜய் தலைமையில் ஆலோசனை
vijay will take oath as Chief Minister
Published on
Updated on
2 min read

மே 7ம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்க இருப்பதாக முடிவு. அதையடுத்து நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவி ஏற்பு விழாவிற்கு ஏற்பாடுகள் செய்ய உள்ளதாக தகவல்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது முடிவுகள் வெளியானதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 234 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. ஆனால் 118 தொகுதிகளை பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் எனும் சூழலில், வெற்றி பெற்ற மாற்று கட்சியில் உள்ள வேட்பாளர்களுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே தவெக ஆட்சி அமைக்க முடியும். மேலும் அவர் வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியில் தனது MLA பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். அவர் சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்த முடிவு.

இதையடுத்து திருச்சி கிழக்கு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அங்கே வேறு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தவெக வேட்பளர் இங்கே களமிறக்க வாய்ப்புள்ளது. லால்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தவெக  வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனை திருச்சி கிழக்கு தொகுதியில் களமிறக்க  வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதனால் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க இன்னும் இரண்டு வாரங்கள் கால அவகாசம் வேண்டி தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு விஜய் கடிதம் எழுதி இருந்தார். தற்போது நாளை மறுநாள் (மே 7) முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக வெளியான தகவல் அரசியல் வட்டத்தில் பெரும் பாப்பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலையில் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் “விஜய் கூட்டணிக்கு அழைப்பு விடுதல் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளதாக” தெரிவித்தது. மேலும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தான் போட்டியிட்ட விருத்தாசலம் தொகையில் வெற்றி பெற்றுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “விஜய் எங்கள் வீட்டு பிள்ளை” என்றும் அவர் ஆட்சி அமைப்பதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். கூட்டணி குறித்த கேள்விகளுக்கு தெளிவான பதில் ஏதும் இல்லை.

தற்போது தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நாளை மறுநாள் பொறுப்பேற்க உள்ளதாக  தகவல் வெளியானதையடுத்து தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. அதையடுத்து வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள் பனையூர் அலுவலகத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். மேலும் கட்சி தலைவர் விஜயை சந்தித்து வாழ்த்துக்களை பெற்று வருகின்றனர். அவர்களை சென்னையிலையே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதவி ஏற்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் யாருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விஜய் தலைமையில் ஆலோசனை நடத்தபடவுள்ளது. மேலும் இதையடுத்து நாளை விஜய் ஆளுநரை சந்தித்து பதவியேற்பு குறித்து பேசுவார் என தெரிகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.     

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com