பாஜகவில் இருந்து விலகினார் விஜயதரணி..! தமிழக வெற்றி கழகத்தில் இணையும் பின்னணி?

அதற்கு முன் காங்கிரஸ் கட்சியில் மூன்று முறையாக சட்டமன்ற உறுப்பினராக
விஜயதரணி
Published on
Updated on
1 min read

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக அலுவலகத்தில், இன்னும் சற்று நேரத்தில் தவெக-வில் இணையயுள்ளார் விஜயதரணி. 

இவர் 2024-ம் ஆண்டு பிப்ரவரி அன்று பாஜக அலுவலகத்தில் எல். முருகன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டார். அதற்கு முன் காங்கிரஸ் கட்சியில் மூன்று முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி "காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை” என்றும் “பெண்களை தலைவர்களாக பார்க்கவும், ஏற்கவும் காங்கிரசுக்கு மனநிலை இல்லை” என்றும் பெண்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் கூறி கட்சியில் இருந்து விலகினார். பாஜகவில் பெண்களுக்கான பல முன்னேற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளது" என்று விளக்கமளித்து பாஜகவில் இணைத்துக் கொண்டார். அதற்கு முன் 2011, 2016 மற்றும் 2021 ஆகிய மூன்று தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  

காங்கிரஸ் கட்சியில் MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். பாஜகவில் அங்கீகாரம் கிடைக்கும் என நம்பி இருந்த நிலையில் அவருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படாத நிலையில் கட்சியில் விலக்குவதாக தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் தான் 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இது பாஜகவுக்கு மட்டுமில்லை விஜயதரணிக்கு பெரிய பின்னடைவாக கருதப்பட்டது.

கடந்த வாரம் தான் பாஜகவில் இருந்து விளக்கி தனி இயக்கத்தை தொடங்கினர் அண்ணாமலை. அதைத்தொடர்ந்து தற்போது விஜயதரணியியும் பாகையில் இருந்து விலகுவது, தமிழகத்தில் அக்கட்சி தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com