

2026 தேர்தலுக்குள் தமிழகத்தின் நிலையே தலைகீழாக மாறிவிடும் என்பதில் சிறு மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழ்நாட்டில் மும்முனை கூட்டணியா நான்கு முனை கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஜனவரிக்கு பிறகுதான் கட்சிகளின் கூட்டணி குறித்து ஒரு தெளிவான நிலைப்பாடு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை தனித்துவமாகியதில் விஜய் -க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த 2026 தேர்தல் திமுக வேண்டுமா? வேண்டாமா? என்பது மட்டும்தான். தேர்வுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், திமுக -விற்கு சாதகமாகவே அமைந்தாலும், விஜய் 20% வாக்குகளை நிச்சயம் உடைப்பார் என்கின்றனர். அரசியல் விமர்சகர்கள்.
இந்த சூழலில் கரூர் சம்பவத்திற்கு பிறகு, விஜய் -க்கு மக்கள் சந்திப்பிற்கான அனுமதி கிடைக்கப்பெறவில்லை, பாண்டிச்சேரியில், 5000 -பேர் மட்டுமே வர வேண்டும் என ஆய்வுறுத்தப்பட்டிருந்தது. இந்த சூழலில், ஈரோடு பெருந்துறையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
ஈரோடு விஜய் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் தீவிரமாக மேற்கொண்டுள்ளார். அதிமுகவிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு தனது பகுதியில் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் அவர் ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக செய்துள்ளார்.
இந்நிலையில் காலையில் தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த விஜய், கார் மூலமாக கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் புறவழிச்சாலையில் வந்துகொண்டிருந்த விஜய்-ன் காரை தொண்டர்கள் சூழ்ந்து ஆர்பரித்துக்கொண்டிருக்கின்றனர். ஏற்கனேவே திருச்சி , கரூர் கூட்டங்களில் வாகனத்தை பின்தொடர்ந்து கால தாமதத்தை ஏற்படுத்தியது கட்சியின் மீது வைக்கப்பட்ட பெரும் விமர்சனம் ஆகும். தற்போது மீண்டும் அதே செயலை தவெக -வினர் செய்து வருவதை சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சரியாக 11.30 மணியளவில் நிகழ்ச்சி துவங்கியது. முதலில் பேசிய தமிழக வெற்றி கழகத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளரான, செங்கோட்டையன் “எம்.ஜி.ஆர் -க்கு பிறகு தனது
விஜய் பேச்சு..!
ஈரோட்டில், காலிங்கராயரின் அணை கதையை குறிப்பிட்டு, “தாய்” தரும் தைரியத்தை எனக்கு நீங்கள் தந்துள்ளீர்கள் என பேசினார், தொடர்ந்து பேசிய அவர் “ எனக்கும் மக்களுக்கும் இடையேயான உறவை பிரிக்க சதி செய்கிறார்கள், ஆனால் உங்களுக்கும் எனக்குமான உறவு 30 ஆண்டுகளுக்கும் மேலானது. அது அவர்களுக்கு புரியாது… உங்கள நம்பித்தான் பா வந்திருக்கேன். வாழ்நாள் பூரா உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன். என பேசிக்கொண்டிருக்கும்போதே, ஒரு ரசிகர் அங்கிருந்த கம்பத்தின் உச்சியில் ஏறினார். அப்போது விஜய், “தம்பி எறங்கு பா.. தயவு செஞ்சி இறங்கு” என கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து அந்த ரசிகர் flying kiss -கொடுக்க சொல்லவே, ‘கம்பத்தை விட்டு இறங்கினால்தான்’ முத்தம் கொடுப்பேன் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “காலிங்கராயர் மக்கள் வாழ்வுக்காக இவ்வளுவு பண்ணிட்டு சொல்றாரு, ஆனா நீங்க எதுமே பண்ணாம எதுக்கு எவ்வளவு விளம்பரம் சிஎம் சார். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை இன்னும் விரிவுபடுத்துனா அந்த மக்களுக்கு எவ்வளவு உதவியாக இருந்திருக்கும், வள்ளுவர் கோட்டம் பத்தி அவ்வளவு யோசிக்கும் நீங்கள் ஏன் மஞ்சள் விளையும் ஈரோடு மண்ணின் மக்களை பார்க்க தவறுகிறீர்கள்.” என பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஈரோடு சிங்கம், சீர்திருத்த நெம்புகோல் நமது வழிகாட்டி, பெரியார் பற்றி பேசாமல் இருக்க முடியுமா? அப்போ அண்ணாவும் எம்.ஜி.ஆர் -ம் யாரு.. ? பெரியாரை பின் தொடர்ந்த அண்ணாவிடம் இருந்தும், எம்.ஜி.ஆர் -இடம் இருந்தும், தேர்தல் அணுகுமுறையை எடுத்துக்கொண்டோம். இவர்கள் தமிழ்நாட்டின் சொத்து, அண்ணா, பெரியார், எம்,ஜிஆர் -ஐ தனிப்பட்ட கட்சிகள் சொந்தம் கொண்டாட முடியாது. அதனால நாங்க ஒரு வழியில் அரசியல் பண்ணிட்டு போய்ட்டு இருக்கோம், உங்களுக்கு தான் TVK -ஒரு பொருட்டே இல்லைல.. அப்புறம் ஏன் எங்கள பத்தி பேசுறீங்க..? ஆளாளுக்கு போய் புலம்பி தள்ளுறீங்க … இது எப்படி இருக்கு தெரியுமா? எனக்கு பயம் இல்ல.. எனக்கு பயம் இல்ல… அப்டினு சொல்லிட்டே பயப்படுறீங்க.. எஹின்ன பசங்க மாறி பண்ணாதீங்க, முதல்ல மண்டையில இருக்க கொண்டையை மாறுங்க சார். சும்மா மாறு வேஷத்துல மரு வெச்சிக்கிட்டு இவங்களே ஆள அனுப்பி, மீடியா ஆளு, ரேடியோ ஆளு னு..பேசிட்டு. ” என பேசினார்.
‘மாசு’ தான் துணை
தொடர்ந்து பேசிய அவர், “திமுக ஆட்சி, நீட் விவகாரம், கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் என கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. பெண்கள் பாதுகாப்பு சாந்தி சிரிக்கிறது” என பேசியிருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இதையல்லாம் மக்கள் பார்க்க மாட்டார் என நினைக்கிறீர்களா!? உங்களுக்கு நீங்க கொள்ளையடிச்சு வச்சிருக்கிற காசு தான் துணை, ஆனா எனக்கு என் மேல எல்லையில்லா பாசம் வெச்சிருக்கிற இந்த மாசு தான் துணை…ஆனா தயவு செஞ்சு பெரியார் பேர வெச்சிட்டு கொள்ளையடிக்காதீங்க. பெரியார் பேரை சொல்லி கொள்ளையடிக்கிற இவங்க தான் நம்ம அரசியல் எதிரி. நம்முடைய அரசியல் எதிரி யார் மக்களே” என அவர் பேச பேச திமுக… திமுக என மக்கள் ஆர்ப்பரித்தனர். அப்போது, “உங்களுக்கு புரியுதுல எனக்கு அதுபோதும்” என பேசினார்.
திமுக -தீய சக்தி!
“நாம் எதிரிகள் யாருனு சொல்லிட்டுதான் களத்துக்கு வந்திருக்கோம், களத்துல இருக்கவங்களைத்தான் எதிர்ப்போம். சும்மா களத்துல இல்லாதவங்களையும், களத்துக்கும் அவங்களுக்கும் சம்மந்தமே இல்லாதவங்களையும் எதிர்க்கிற ஐடியா இல்ல பாஸ்… நீங்க கேக்குறீங்கன்னுலாம் எதிர்க்க முடியாது. எங்களுக்கு நெறைய வேல இருக்கு..
எத்தனை எத்தனை பொய் வாக்குறுதிகள், “நீட்டை ஒழிப்போம், சிலிண்டருக்கு மானியம் தருவோம்” என சொன்னார்களே செய்தார்களா!? என ஜெயலலிதா பாணியில் பேசியிருந்தார். இவங்க எப்போவுமீ இப்படித்தான் சொன்னதை செய்ததே இல்ல.. திமுக -வும் பிரச்சனைகளும் ஃபெவிக்கால் போட்டு ஓட்டுனமாரி, பிரிக்கவே முடியாது.” என பேசியிருந்தார்.
தொடர்ந்து ஈரோட்டில் உள்ள கரும்பு, நெல் கொள்முதல் பிரச்சனைகள் என உள்ளூர் பிரச்னைகள் குறித்தும் பேசியிருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “24 மணி நேரமும் அவர்களின் ஒரே யோசனை, தமிழக வெற்றி கழகத்தை எப்படி முடக்குவது என்பதுதான், வாக்குறுதி நம்பர் 103, பவானி - நொய்யல் - அமராவதி இணைப்பு திட்டம், சொன்னார்களே.. செய்தார்களா? மக்கள் பிரச்சனை எதையுமே சரி செய்யாமல் மாடல் அரசு, மாடல் அரசு என்கிறீர்களே கூச்சமா இல்லை…
இந்த பிரச்சனை எல்லாம் விட்டுவிட்டு, நா எத்தன நிமிஷம் பேசுறன்னு, ஏன் பாக்குறீங்க சார். அத விட்டுட்டு தனிப்பட்ட முறையில், தரக்குறைவா பேசுறீங்க.. எனக்கு அத விட மோசமா பேச அவரும். ஆனா வேண்டாம்னு இருக்கேன்..”
காஞ்சிபுரத்துல நா பேசினதா தப்பு தப்பா புரிஞ்சிகிட்டு பிரச்சாரம் பண்றீங்க, “நா இப்போ சொல்றேன், நா இலவசங்களுக்கு எதிரானவன் இல்ல, மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கு பண்ற நலத்திட்டங்கள, ஓசி, ஓசி, னு சொல்லி அசிங்கப்படுத்துனா, அத கேட்டுட்டு நா சும்மா இருக்க மாட்ட” நா மக்கள் பக்கம்தான் மக்களும் என் பக்கம்தான்.
பலமுறை ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆர் -ம் ‘திமுக -ஒரு தீய சக்தி’ னு சொல்லி கேட்டிருக்கேன். அப்போல்லாம் யோசிச்சதுண்டு, ஏன் இவ்வளவு கோவமா பேசுறாங்கனு, இப்போல புரியுது.. அனா இப்போ சொல்றேன் ‘திமுக ஒரு தீய சக்தி, தீய சக்தி. தீய சக்தி..” அதை எதிர்க்க வந்த நாம் தூய சக்தி” என பேசியிருந்தார்.
ஜெயலலிதா தனது பரப்புரைகளில் அதிகமாக பயன்படுத்திய சொற்பதம் ‘திமுக ஒரு தீய சக்தி” இதையே விஜயும் இன்று கையிலெடுத்திருப்பது கவனிக்கக்கக்து .
மேலும், விஜய் இம்முறை கடுமையாகி திமுக -வை சாடியிருந்தார், மேலும் பாஜக -வை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் திமுக -விற்கு பெரும் அச்சுறுத்தலாக விஜய் உருவெடுத்திருந்தாலும் இதுவரை எப்போதுமே செய்யாத ஒரு காரியத்தை விஜய் செய்திருக்கிறார். கடந்த எந்த கூட்டத்திலும் விஜய் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் இம்முறை ஜெயலலிதா -வின் பெயரை குறிப்பிட்டு, அவரின் மிகவும் பிரபலமான “திமுக ஒரு ஒரு தீய சக்தி, சொன்னீர்களே? செய்தீர்களா?” உள்ளிட்ட சொற்பதங்களை கையிலெடுத்து உள்ளார்.
ஏற்கனவே அதிமுக வலுவிழந்து உள்ளது. கட்சியின் மூத்த நபரான செங்கோட்டையும் சென்றுவிட்டார், ஆரம்பத்திலிருந்தே விஜய் அதிமுக -வாக்குகளை விழுங்குவார் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால், தற்போது எம்.ஜி.ஆர், அண்ணா, ஜெயலலிதா ஆகியோரை தமிழகத்தின் சொத்து யாரும் சொந்தம் கொண்டாட முடியாது எனக்கூறி அதிமுக -வின் மாற்றாக விஜய் வளருகிறாரோ என தோன்றுவதாக சில விமர்சகர்கள் தெரிவித்து உள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.