“மீண்டும் சிக்கலில் தவெக தலைவர்” - மதுரை வழக்கு காரணமாக வெடித்த பிரச்சனை.. பெரம்பூர் தொகுதி போட்டியிடுவாரா விஜய்?

ஒரே வேட்பாளர் இரு வேறு தகவல்கள் கொடுத்த காரணத்தால் திருச்சி கிழக்கு தொகுதியிலும் சிக்கல்...
vijay
vijay
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் வரும் (ஏப் 23) ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக, திமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய காட்சிகள் களப்பணியில் ஈடுபட்டு தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அனைத்து கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்து வரும் சூழலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் விதிகளின் படி வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் அவர்களது சொத்து விவரங்கள், கடன் விவரங்கள்,கல்வி தகுதி, மற்றும் குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை குறிப்பிட வேண்டும். அதன்படி விஜய் பெரம்பூரில் தாக்கல் செய்த மனுவில் சொத்து விவரம் மற்றும் கடன் விவரங்களை குறிப்பிட்ட நிலையில் “தன் மீது எந்தவித குற்றவியல் வழக்குகளும் இல்லை” என குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் மீது கடந்த ஆண்டு மதுரையில் நடந்த மாநாட்டின் போது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதனை அவர் மனுவில் குறிப்பிடவில்லை என கூறப்படுகிறது.

vijay
vijay

இதனால் தற்போது பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்புமனுவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகா விஜயின் வேட்புமனு ரத்து செய்யப்படவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்த விஜய் அதில் தன் மீதுள்ள மதுரை வழக்கு மற்றும் புதிதாக பதியப்பட்ட பெரம்பூர் பிரச்சார வழக்குகளை குறிப்பிட்டுள்ள நிலையில் ஒரே வேட்பாளர் இரு வேறு தகவல்கள் கொடுத்த காரணத்தால் திருச்சி கிழக்கு தொகுதியிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆனால் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் நான்கு செட் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம். எனவே இதுவரை விஜய் பெரம்பூர் தொகுதியில் இரண்டு செட் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ள நிலையில் இன்னும் இரண்டு செட் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். எனவே வரும் (ஏப்ரல் 6) ஆம் தேதிக்குள் திருத்தப்பட்ட முழு விவரங்களை கொடுத்து விஜய் வேட்புமனு தாக்கல் செய்தல் அவர் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com