தமிழகத்தில் 2026ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. திங்களன்று வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில் தவெக 108 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், திமுகவின் முக்கிய புள்ளிகள் தவெக வேட்பாளர்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். மேலும், மு.க ஸ்டாலினின் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றிபெற்றார். தற்போது, தமிழகத்தில் ஆட்சியமைக்க 118 MLA-க்கள் தேவையாக உள்ள நிலையில் தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் உருவாகியுள்ளது.
நேற்றைய தினம் தனது வெற்றி சான்றிதழை அவர் படித்த கல்லூரியான லயோலா கல்லூரியில் சென்று உற்சாகத்துடன் பெற்றுக்கொண்டார். தற்போது தவெக தலைவர் விஜய் 2 தொகுதிகளில் வெற்றிபெற்ற நிலையில் ஒரு நபர் 2 தொகுதிகளில் MLA-வாக இருக்கமுடியாது என்ற சூழலில் விஜய் ஒரு தொகுதியில் பதவி விலக நேரிட்டால் மொத்தமாக தவெக 107 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக இருக்கும். தற்போது கூட்டணிக்காக தவெக எந்த கட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தும்? என்ற கேள்வி பலரிடமும் எழுத ஒன்றாக இருந்தது. தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது. தவெக தலைவர் விஜய் காங்கிரஸிடம் கூட்டணிக்காக பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தவெக-விற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தமிழக காங்கிரஸ் முடிவெடுக்கலாம் என கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து விஜய், எவரையும் சாராமல் மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்தில் தில்லாக நின்றோம். மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றியை காணிக்கையாக்குகிறேன் என்று கூறிருக்கிறார். மேலும் தமிழக தேர்தலில் ஊரு அரசியல் கலாச்சாரமாகவே மாறியிருந்த பணநாயகம் ஆழ குழிதோண்டி புதைக்கப்பட்டது என்றும் அவர் கூறியிருக்கிறார். மேலும், தவெக வெற்றிபெற்றுள்ள நிலையில் விஜய் முதல்வர்க உள்ள நிலையில், ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் இருவரும் துணை முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதாக கூறப்படுகிறது. ஆதவ் அர்ஜுனா விளையாட்டு துறையை கூடுதலாக கேட்பதாகவும், செங்கோட்டையன் பொதுப்பணித்துறையை கோருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் CMDA ஆகியவற்றை புஸ்ஸி ஆனந்த் கேட்பதாகவும் மேலும், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று வெற்றிபெற்ற ஜே.டி.சி. பிரபாகருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வரும் மே 7ம் தேதி விஜய் முதல்வர் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.