பிணத்தின் தலையை வைத்து சாமி ஆடும் வைரல் வீடியோ!  

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கோவில் திருவிழாவில் இறந்த பிணத்தின் தலையை வைத்து சாமி ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.
பிணத்தின் தலையை வைத்து சாமி ஆடும் வைரல் வீடியோ!   
Published on
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கோவில் திருவிழாவில் இறந்த பிணத்தின் தலையை வைத்து சாமி ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

கல்லூரணி கிராமத்தில் சக்திபோத்தி மாடசாமி என்னும் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் வெள்ளியில் திருவிழா கொண்டாடுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டும் நேற்று கொடை விழா தொடங்கியது.  இக்கொடை விழாவில் சிறப்பு அம்சமே சாமி ஆடுபவர்கள் வேட்டைக்கு சென்று இடுகாட்டில் உள்ள பிணத்தின் தலையை வெட்டி எடுத்து அதனை அரிவாள்களில் குத்தி கொண்டு கோவிலுக்கு வந்து நிறைவு பெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று இரவு நடைபெற்ற திருவிழாவில் சாமி பூஜையின் போது சாமி ஆடுபவர் பிணத்தின் தலையை கொண்டு வந்து கோவில் முன்பு ஆடியது கல்லூரணி ஊர் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பார்க்கப்பட்டது. இந்த திருவிழாவை காண பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அங்கு திரண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com