அமைச்சர்களின் வருகை: பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்களுக்கு போதுமான உணவு வழங்கவில்லை..!

அமைச்சர்களின் வருகை:  பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்களுக்கு போதுமான உணவு வழங்கவில்லை..!
Published on
Updated on
1 min read

ராமாநாதபுரம் மாட்டம் பரமக்குடியில் அமைச்சர்களின் வருகைக்காக பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்களுக்கு போதுமான உணவு வழங்கப்படவில்லை என காவலர்கள் கவலை தெரிவித்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனயடுத்து, பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் வருகை தந்தனர்.  இதற்காக இரவு முதலே பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.

மேலும்,  பல்வேறு தலைவர்கள் வருகைக்காக பாதுகாப்புக்கு நின்ற போலீசாருக்கு காலையில் எட்டு மணிக்கு மினி டாட்டா ஏஸ் வாகனத்தில் ஒரு சிறிய பாக்ஸில் பொங்கலும் வடையும் போலீசாருக்கு கொடுக்கப்பட்டது.

இதை வாங்குவதற்கு வாகனத்திற்கு முன்னால் நின்று காவலர்கள் வாங்கிச் சென்றனர். ஒரு சிறிய பாக்சில் பொங்கலும் வடையும் எவ்வாறு போதுமானதாக இருக்கும் என்று சில போலீசார் ஆதங்கப்பட்டனர்.

இரவில் இருந்து தொடர் பாதுகாப்பில் இருக்கும் போலீசாருக்கு முறையான உணவு வழங்காததை குறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில போலீசார் ஆதங்கப்பட்டு கூறி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com