திமுக கூட்டணியில் 8 தொகுதிகளை உறுதிப்படுத்தியது விசிக! 'வலதுசாரி சக்தி வலுப்பெறுவதை தடுக்கவே இந்த கூட்டணி’ திருமாவளவன் விளக்கம்..
நேற்று சென்னையில் நடந்த விசிக உயர்நிலைக்குழு கூட்டத்தில் வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் எனவும், 2028 மாநிலங்களவை தேர்தலில் ஒரு எம்.பி சீட் கேட்டு பெற வேண்டும் என்றும் கேட்டு விசிக உறுப்பினர்கள் தீர்மானம் வைத்திருந்தனர். ஆனால் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் திமுக 7 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளதாக இருந்த நிலையில் தற்போது 8 தொகுதிகள் என்று முடிவாகியுள்ளது.
இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையில், திமுக மற்றும் விசிக இடையே கூட்டணி குறித்த இழுபறி முடிவடைந்து தற்போது கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக வுக்கு 6 தனி தொகுதிகள் மற்றும் 2 பொது தொகுதிகள் மொத்தம் 8 தொகுதிகள் என ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கூட்டணி கட்சியின் நலன் கருதி இந்த தொகுதி பங்கீட்டை ஏற்கிறோம் என்றும் வலதுசாரி பிற்போக்கு அரசியல் காலூன்றி விடகூடாது வலு பெற்று விடக்கூடாது, அது தமிழ்நாட்டுக்கும் நல்லது இல்லை நாட்டுக்கும் நல்லது இல்லை என்பதை கருத்தில் கொண்டுதான் இந்த கூட்டணியில் நிலைத்து இருக்கிறோம் என்றும் தெரிவித்தார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நலன் எவ்வளவு முக்கியமோ அதே அளவு கூட்டணி நலனும் முக்கியம் என குறிப்பிட்டிருந்தார். நாட்டில் வலது சாரிகள் சக்தி வலுப்பெறுவதை தடுப்பதற்காகவே இந்த கூட்டணி அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். வலதுசாரிகளின் சக்திகள் வலுப்பெற்றால் விளிம்பு நிலை மக்களுக்காக போராடும் இடதுசாரிகளின் குரல் ஒடுக்கும் நிலை வரும் அதை தடுக்கவே இந்த கூட்டணி என்றும் தெரிவித்தார்.
அதனையடுத்து புதுச்சேரியில் தனித்து போட்டியிடுவது குறித்த செய்தியாளர் கேள்விகளுக்கு, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையில் அதிருப்தி உள்ளது என்று விளக்கமளித்துள்ளார். 200 க்கு மேற்பட்ட தொகுதிகளில் இந்த கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் அதற்கு விடுதலை கட்சி உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். தொகுதி பங்கீடு இழுபறி குறித்த கேள்விகளுக்கு “இந்த கூட்டணியில் யாரும் எங்களை அல்லது வீழ்த்தவோ அல்லது பலவீனம் படுத்தவோ ஒருபோதும் இடமில்லை அப்படி நினைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி பலவீனமான கட்சியும் இல்லை, மாநில அந்தஸ்தை பெற்ற வலுவான கட்சி என்றும் விளக்கமளித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.
.png)
