தமிழ்நாடு
Eco பூங்காவில் நடைபெற்ற வாக்கத்தான் நிகழ்வு...!
சென்னை Eco பூங்காவில் நடைபெற்ற வாக்கத்தான் நிகழ்ச்சியில் ஏராளமானோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
மனநிலையையும் உடல்நிலையையும் சீராக்கி இளம்வயதிலேயே ஏற்படும் மாரடைப்பையும் இதயக் கோளாறையும் தடுக்கும் வகையில் தனியார் நிறுவனத்தின் மூலம் வாக்கத்தான் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது.
தொடர்ந்து சேத்துப்பட்டில் உள்ள Eco பூங்காவில் நடைபெற்ற இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மனதை வலுப்படுத்தவும் மக்களின் அன்றாட வேலைப்பளுவில் இருந்து ஆரோக்கியத்தின் பக்கம் திருப்பவும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். அதன்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் இந்நிகழ்வில் பங்கேற்று உற்சாத்துடன் நடந்து சென்றனர்.