சேலம் மாவட்டம் கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் மூன்று மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடதக்கது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும். பாசன பகுதியில் பெய்யும் மழையின் அளவை பொறுத்து நீர் திறப்பு இருக்கும்.