12 ஆம் தேதி தண்ணீர் திறப்பு...தூர்வாரும் பணிகள் குறித்த குறும்படத்தை பார்வையிட்டார் முதலமைச்சர்!

12 ஆம் தேதி தண்ணீர் திறப்பு...தூர்வாரும் பணிகள் குறித்த குறும்படத்தை பார்வையிட்டார் முதலமைச்சர்!
Published on
Updated on
1 min read

முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடியில் உள்ள  முத்துவாரி வாய்க்கால் மற்றும் விண்ணமங்கலம் வாய்க்கால்களில்  மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக  வரும் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார். 

இந்நிலையில், காவிரிப் பாசனப் பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்டு வரும் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக தஞ்சாவூர் சென்றுள்ளார். அங்குள்ள  சுற்றுலா மாளிகைக்குச் சென்ற முதலமைச்சர் நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்த குறும்படத்தைப் பார்வையிட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடியில் உள்ள 3 புள்ளி 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட முத்துவாரி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்களை  பெற்றுக் கொண்டார். 

பின்னர் விண்ணமங்கலம் வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் துர்வாரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com