இரண்டு நாள் மழை...விவசாயிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

இரண்டு நாள் மழை...விவசாயிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!
Published on
Updated on
1 min read

நாகை மாவட்டத்தில் நள்ளிரவு பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஆயிரம் ஏக்கர் நெற்கதிர்கள் வயலில் அடியோடு சாய்ந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மகிழ்ச்சியில் திளைத்திருந்த விவசாயிகள்:

நாகப்பட்டினம் மாவட்டத்தில், 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் நல்ல மகசூல் கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.

மழையால் அடியோடு சாய்ந்த நெற்பயிர்கள்:

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால், சிக்கல், கீழையூர், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில், அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 10 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் வயலில் அடியோடு சாய்ந்துள்ளன. 

விவசாயிகள் கோரிக்கை:

இன்னும் ஓரிரு தினங்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில் வயலில் நெற்கதிர்கள் நீரில் முழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் குறுவை சாகுபடிக்கு காப்பீட்டு திட்டம் இல்லாததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனைக்கு ஆளாகி உள்ளனர். வயலில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்க முடியாத சூழல் நிலவுவதால், நெற்கதிர்கள் மீண்டும் முளைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சம்பா மற்றும் தாளடிக்கு காப்பீடு செய்வது போல், குறுவை சாகுபடிக்கும் காப்பீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com