
2026 -சட்டபேரவை தேர்தலை முன்னிட்டு தினம் தினம் அப்டேட் வந்த வண்ணம் உள்ளன. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் தமிழக்தில் உள்ள அனைத்து கட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு வேலை செய்து வருகின்றன.
திமுக கூட்டணி
உண்மையில் திமுக ஒரு வலுவான கூட்டணியை கையில் வைத்துள்ளது. சித்தாந்த அடிப்படையில், ஒருமித்த கருத்துக்களை கொண்ட கட்சிகளோடு திமுக கூட்டணி அமைத்துள்ளது. எத்துணையோ முரண்கள் இருந்தாலும் தற்போது வரை கூட்டணியில் எந்த பிளவும் இதுவரை ஏற்படவில்லை.
மேலும் திமுக -வில் விசிக,சிபிஐ,சிபிஎம், மதிமுக, தவாக, முஸ்லீம் லீக், கொமதேக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இதோடு கடந்த 2024 -க்கு பிறகு கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இந்த கூட்டணியில் தற்போது தன்னை இணைத்துள்ளது.
அதிமுக -பாஜக கூட்டணி
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக விளங்கும் அதிமுக திடீரென பாஜக -வுடன் கூட்டணி அமைத்துள்ளது. அமித்ஷா நேரில் வந்து அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தார். ஆனால் திமுக -வை வீழ்த்த இது போதாது என எடப்பாடிக்கு நன்றாக தெரியும். அதனால்தான் அதிமுக நிர்வாகிகள் ஒரு நாளைக்கு இரண்டு முறை “தம்பி விஜய் வர வேண்டும்” என தாம்பூலம் வைத்து அழைக்கின்றனர்.
அதிமுக -வில் மற்றுமொரு பிரச்னை என்னவென்றால் பாமக.. பாமக அதிமுக கூட்டணியில் இருப்பது உறுதியாகி இருந்தாலும், ராமதாஸ் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும் ராஜ்யசபா எம்.பி சீட் விவகாரத்தில் பிரேமலதாவும் எடப்பாடி மீது கோவத்தில்தான் உள்ளார். ஆகையால் தான் அதிமுக -வின் கூட்டணி வியூகம் குறித்து தற்போது வரை எந்த நிலைத்தன்மையும் இல்லை.
பகீர் கிளப்பிய முருகன்
பாஜக -வின் முழுமுதற் குறிக்கோள் திமுக -வை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றிவிட்டு தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா சும்மா சும்மா தமிழகம் வந்து போகிறார். தற்போது வருகிற 22 -ஆம் தேதி இந்து பாசிச பாஜக முருகர் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும் மதவாத அரசியல் செய்யும் பாஜக -வால் தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியாததற்கு காரணம் இங்குள்ள திராவிட சித்தாந்தம் தான் காரணம். இப்னும் எப்படியேனும் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என பாஜக போராடி வருகிறது,
அதன் நீட்சியாக பாஜக மத்திய இணை அமைச்சர் வேல்முருகன், “ இன்னும் மூன்று மாதங்களில் திமுக உடையும், திமுக கூட்டணி கடற்சி ஒன்றோடு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். அதே மூன்று மாதங்களில் பாஜக -கூட்டணி விரிவடையும். நாங்கள் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் கட்சி ஏற்கனவே வாஜ்பாயோடு கூட்டணியில் இருந்த கட்சி தான்’ என பேசி சலசலப்பை கிளப்பியிருந்தார்.
மறுப்பு தெரிவித்த துரை வைகோ
மதிமுக திமுக கூட்டணியிலிருந்து விளகுகிறதா? என துரை வைகோ -விடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த துரை வைகோ “நிச்சயம் அப்படி ஒன்று நடக்கவில்லை. என்னிடமோ கழக தலைவர் வைகோ அவர்களிடமோ இதுவரை அப்படி அவர்கள் ஏதும் பேசவில்லை. பாஜக -வினர் பேசுவது ஒருவேளை அவர்களின் அரசியல் யுக்தியாக இருக்கலாம்..” என பேசியிருந்தார்.
அப்போ வேல்முருகன் குறிப்பிட்டது யாரை? என்ற புதிய கேள்வியும் அனுமான் பதில்களும் வலுத்து வருகின்றன...
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.