

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும், மறைந்த முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இதில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “கேப்டன் அவர்களுடைய இரண்டாம் ஆண்டு குருபூஜைக்கு காலையிலிருந்து இப்போது வரை தமிழகம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள்,கழக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், எல் முருகன், செல்வ பெருந்தகை, சீமான் உட்பட அனைத்து கட்சிகளையும் சேர்ந்தவர்களுக்கும் நேரடியாக சென்று பத்திரிகை கொடுத்தோம் அத்தனை கட்சித் தலைவர்களும் இன்றைக்கு வந்திருக்கிறார்கள். அதேபோல் இன்றைக்கு ட்விட்டரில் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து தலைவர்களும் கேப்டன் அவர்களுக்கு ட்விட்டர் மூலமாக அஞ்சலி செலுத்துகிறார்கள்.
தற்போது வரை தொடர்ந்து மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள் இன்னும் வருவார்கள். கேப்டன் மீது அவர்கள் வைத்திருக்க கூடிய அன்பு,பாசம்,நம்பிக்கையின் வெளிப்பாடாக தான் இதை பார்க்க வேண்டும். கேப்டன் மறைந்து இரண்டு ஆண்டு முடிந்து மூன்றாம் ஆண்டு துவங்குகிறது ஆனால் யார் மனதில் இருந்தும் கேப்டன் நீங்காமல் இருந்துவருகிறார். இன்றைக்கு பொதுமக்கள் கண்ணீர் முலம் அவர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும் இன்றைக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
நேரில் வந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் சமூக வலைதளம் மூலம் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் தொலைபேசி எண் மூலம் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் தேமுதிக கழகத்தின் சார்பாக எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேப்டன் ஜாதி மதம் இனமொழி அப்பாற்பட்ட தலைவர் அனைவரும் மனதிலும் நீங்க இடம் பிடித்தவர் என்பதை எல்லாருக்கும் தெரியும். மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர் கேப்டன். தான் செய்த நல திட்டங்கள் உதவிகள் சமூகப் பணிகள் நடிகராக இருந்த போதும் அரசியல் தலைவராக இருந்த போதும் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் மக்களுக்கு செய்து கலைத்துறை அரசியல் துறை அனைவருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை கேப்டன் செய்துள்ளார். எனவே இத்தனை கூட்டம் அதனுடைய அன்பின் வெளிப்பாடுதான் இது கலை உலகில் இருந்து இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் சண்டை பயிற்சியின் இயக்குனர்கள் அனைவருமே வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள் இது அனைத்தும் கேப்டன் எத்தனை ஆண்டு காலமானாலும் மக்கள் மனதிலிருந்து நீங்க இடம் பிடித்திருப்பார் என்பதற்கான அடையாளமாக தான் பார்க்கப்படுகிறது.” என பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழக வெற்றி கழகத்திற்கு அழைப்பு விடுத்தோம் ஆனால் அவர் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்துகிறார். ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக விஜய் மலேசியாவில் இருந்ததை நேற்று நாம் பார்த்தோம். அதனால் யாருமே வரக்கூடாது என்பதில்லை எல்லாமே சூழ்நிலைதான் யாரும் வரக்கூடாது என்பது கிடையாது” என அவர் பேசியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.