”மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்” - அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்!

”மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்” - அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்!

Published on

மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். 

நாகையில், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ரகுபதி, மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும், மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட உள்ளதால், விவசாயிகளுக்கு வழங்க  விதைநெல் தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com