”நண்பராக இருந்தாலும் எதிரியாக இருந்தாலும் சரி விடமாட்டோம்” துரைமுருகன் உறுதி!

”நண்பராக இருந்தாலும் எதிரியாக இருந்தாலும் சரி விடமாட்டோம்” துரைமுருகன் உறுதி!
Published on: 
Updated on: 
1 min read

யாராக இருந்தாலும் மேகதாதுவில் அணையைக் கட்ட விடமாட்டோம் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனிடம்,  நடிகர் விஜய் தொடங்கும் இரவு பாடசாலை குறித்து கேட்ட போது, மக்களின் நன்மதிப்பைப் பெற்ற பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில், விஜய் இரவு பாடசாலைகள் தொடங்குவது நல்லது தான் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நண்பராக இருந்தாலும் எதிரியாக இருந்தாலும் மேகதாதுவில் அணையைக் கட்ட விடமாட்டோம் என்பதில் உறுதியாக இருப்போம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com