முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
*தமிழ்நாடு காவல்துறைக்கு மொத்தம் ரூ.8,930.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
*காவல்துறையில் காலியாக உள்ள 14,317 இடங்களை நிரப்ப நடவடிக்கை
*தீ விபத்து இடத்திற்கு விரைவில் செல்ல தீயணைப்பு நிலையங்கள் அறிவியல்பூர்வ ஆய்வின்படி அமைக்கப்படும்
*அடுத்த 5ஆண்டுகளில் அனைத்து நீதிமன்றங்களுக்கு போதிய கட்டிடங்கள் இருபது உறுதி செய்யப்படும்
*நீதித்துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப தமிழக அரசு ஆதரவு அளிக்கும்
*நீதித்துறைக்கு நடப்பு பட்ஜெட்டில் ரூ.1713.30 கோடி ஒதுக்கீடு
* எளிதில் வெள்ளப்பாதிப்புகளை ஏற்படும் 4,133 இடங்களை கண்டறியப்பட்டு சரிசெய்யும் பணிகள் விரைவுப்படுத்தப்படும்
* நிலம் கையகப்படுத்துதலை எளிமையாக்க நடவடிக்கை எடுத்து இழப்பீடு உரிய நேரத்தில் கிடைப்பது உறுதி செய்யப்படும்
*பேரிடர் மேலாண்மைக்காக 15வது நிதிக்குழு பரிந்துரைத்த ரூ.1,360 கோடி போதுமானதாக இல்லை
*தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு 30கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்
*அடுத்த 10 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்படும் மற்றும் 111 கோடி ரூபாய் செலவில் 200 குளங்கள் சீரமைக்கப்படும்
*பாசனத்திற்காக மொத்தம் ரூ.6,607 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
*கொரோனா நிவாரண நிதியாக இதுவரை ரூ.9,370 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது
*நதிநீர் பிரச்னைக்காக கேரள அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்
*தமிழ்நாடு மீன்வளத்துறைக்கு ரூ.303 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் தமிழகத்தில் அமைக்கப்படும்
*கடல் பாசி வளர்ப்பு, கூண்டுகளில் மீன் வளர்ப்பு பொன்ற மற்று வாழ்வாதார திட்டங்கள் ஊக்குவிக்கப்படும்
*தரங்கம்பாடி, திருவொற்றியூர்,ஆற்காட்டுத்துறை மீன்பிடி துறைமுகத் திட்டப்பணி விரைந்து முடிக்கப்படும்
*புதிதாக 6 இடங்களில் மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க 6.25கோடி ரூபாயிம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்
*5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழை பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்
*ஜல்ஜீவன் இயக்கம் மூலம் வீட்டுக்குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு 2 ஆயிரம் கோடி செலவிடப்படும்
*2021-22ஆம் ஆண்டில் ரூ.8,017.41 கோடி செலவில் 2,89,877 வீடுகள் கட்டிதரப்படும்
*1.27கோடி குடும்பங்களுக்கு வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க வழிவகை செய்யப்படும்
*அடுத்த 5 ஆண்டுகளில் 8,03,924 குடும்பங்களுக்கு கான்கிரிட் வீடு கிடைப்பது உறுதிசெய்யப்படும்
*கிராமப்புறங்களில் ரூ.400 கோடி ரூபாய் செலவில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்
*ஊரக வேலை உறுதித்திட்ட பணிநாட்களை 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்
*ஊரக வேலை உறுதித்திட்ட ஊதியத்தை ரூ.300 ஆக உயர்த்த வலியுறுத்தப்படும்
*சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி நடப்பாண்டு முதல் மீண்டும் ரூ.3கோடி அளிக்கப்படும்
*கீழடி, ஆதிச்சநல்லூர்,கொற்கை உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கீடு மற்றும் கீழடியில் திறந்தவேளி அருங்காட்சியகம் அமைக்கப்படும்
*சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5.500 கோடி சிறப்பு கோவிட் கடன் உள்ளிட்ட 20ஆயிரம் கோடி கடன் உறுதிசெய்யப்படும்
*36,218 சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் ரூ.809.71 கோடி செலவில் ஊரக வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்படும்
*அனைத்து நகரங்களிலும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் நடைபாதைகள் அமைக்கப்படும்
*அனைத்து நகரங்களிலும் 30 மீட்டர் இடைவெளியில் தெரு விளக்குகள் அமைக்கப்படும்
*ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும்
*திருச்சியில் புதிதாக இருங்கிணைந்த பேருந்து நிலையம்,வணிக வளாகம் ஏற்படுத்தப்படும்
*சீர்மிகு நகரங்களின் திட்டத்திற்கு ரூ.2,350 கோடியும் அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடி ஒதுக்கீடு
*தமிழ்நாட்டில் நடப்பாண்டு முதல் ஆயிரம் கோடி ரூபாயில் கலைஞர் நகர்புற மேம்பாடுத் திட்டம் செயல்படுத்தப்படும்
*தமிழகத்தில் உள்ள பழைமையாக அரசு கட்டடங்களை புதுப்பொலிவு பெற நடவடிக்கை எடுக்கப்படும்
*சென்னையிலுள்ள நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் திட்டம் ரூ.2,371 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்
*10 லட்சம் பேர் வசிக்கும் நகரங்கள் அதிகரித்து வரும் நிலையில் நகரமாயமாக்கலை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை