

இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையா சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி குறித்து மனம் திறந்து பேசினார். அப்போது எம்.ஜி.ஆருடன் விஜய்யை ஒப்பிடுவது குறித்தும் பேசினார்.
ஆட்சியின் மீதான விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு, "முதன்முதலாக ஆட்சிக்கு வந்திருக்கின்றனர். 4 மாதங்கள்தான் ஆகியிருக்கிறது. செங்கோட்டையானை தவிர எல்லாருமே புதியவர்கள். அதிகாரிகளை கையாளுவதை வைத்து தான் நிர்வாகம் இருக்கிறது. அதிகாரிகளை கையாள ஒவ்வொருவராக கற்றுக்கொண்டு வருகிறார்கள்." எனப் பதில் சொன்னார்.
மேலும் விஜய் குறித்து பேசுகையில், "வெற்றிடத்தை காற்று நிரப்பிக்கொள்ளும் என்று சொல்வார்கள். கலைஞர் விமர்சனங்களுக்குப் அப்பாற்பட்டவர். ஜெயலலிதா ஒரு பெண்ணின் பார்வையில் இலக்கணமாக இருந்தவர். இவர்கள் இப்போதுதானே 4 மாதங்களாக வந்திருக்கிறார்கள்." என்றார்.
தொடர்ந்து விஜய்யை எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுவது குறித்த கேள்விக்கு, "புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுகின்றனர். காலம் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு இருக்கிறது. ஒப்பிடுவது அவர் மீது அதீத அன்பு கொண்டவர்கள் வேலையாக இருக்கலாம். அந்த ஒப்பீட்டுக்கு நாம் தகுதியானவர்களா என்பதை காலம் கவனித்துக்கொண்டு இருக்கிறது. அவர் அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்வார் என நினைக்கிறேன். " என்றார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.