சசிகலாவின் அடுத்த அதிரடி என்ன..? எதிர்பார்ப்பில்  விசுவாசிகள்...

சசிகலாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்பது குறித்த எதிர்பார்ப்பில் அவரது விசுவாசிகள் உள்ளனர்.
சசிகலாவின் அடுத்த அதிரடி என்ன..? எதிர்பார்ப்பில்  விசுவாசிகள்...
Published on: 
Updated on: 
1 min read

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து வெளியே வந்தபின்பு அரசியலிலிருந்து ஒதுக்கியிருந்த சசிகலா, சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு சமீபகாலமாக அதிமுக நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் தொடர்ந்து தானாகவே பேசி ஈபிஎஸ், ஓபிஎஸ் வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறார். 

சசிகலாவுடன் பேசும் அதிமுவினர் தொடர்ந்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டு வரும் நிலையிலும், அவருடன் அதிமுகவினர் பேசிக் கொண்டுதான் வருகின்றனர். தினமும் நாலைந்து ஆடியோக்களை வெளியிடுகிறார் சசிகலா. அவரிடம் பேசும் அதிமுகவினரும் அதிமுகவை காப்பாற்ற வந்த காவல் தெய்வமே என்று  அவரை அரசியலுக்கு அழைக்கின்றனர்.  

அதன்படி சென்னையை சேர்ந்த புவேனந்திரன், விருதுநகரைச் சேர்ந்த குரு ராமச்சந்திரன், திருப்பூரைச் சேர்ந்த சமரசன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, ஈரோட்டைச் சேர்ந்த கோபால் மற்றும் பண்ருட்டியைச் சேர்ந்த உத்திரவேல் ஆகியோருடன் நேற்று தொலைபேசியில் பேசினார். அந்த பேச்சுக்களின் ஆடியோக்கள் வெளியாகி அதிமுக வட்டத்தில் கலக்கத்தை உண்டுபண்ணியிருக்கிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com