ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை..! அதிமுக -வில் சலசலப்பை ஏற்படுத்திய கடம்பூர் ராஜு!

கூட்டணி ஆட்சியில் இருந்துவிட்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல...
kadambur raju
kadambur raju
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு பேசினார். அவர் அந்தக்கூட்டத்தில் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்துள்ளார். இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

1998-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க இருந்தது. நாங்கள் தவறு செய்துவிட்டோம். கூட்டணி ஆட்சியில் இருந்துவிட்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல இடையில் வந்த சுப்பிரமணியசுவாமி பேச்சை கேட்டு ஒரு ஓட்டில் பா.ஜ.க. வை வீழ்த்தி வரலாற்று பிழை செய்துவிட்டோம்.

அன்றைக்கு பா.ஜ.க. -தி.மு.க. கூட்டணி அமைந்ததன் காரணமாக தான் தி.மு.க. இன்று பொருளாதார வளர்ச்சியில் உள்ளது. 

பா.ஜ.க. ஆட்சியை அ.தி.மு.க. கவிழ்த்ததால் தி.மு.க. 14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தது. தி.மு.க. தமிழகத்தில் வளர பா.ஜ.க. தான் காரணம்.

தி.மு.க.விற்கு அதிகாரம் கொடுத்ததே பா.ஜ.க. தான். அந்த பா.ஜ.க.வை இன்றைக்கு தி.மு.க. தீண்ட தகாத கட்சியாக பார்க்கிறது என்றார்.

ஜெயலலிதாவின் முடிவை விமர்சித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளது அ.தி.மு.க.வில் பார்ப்பப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com