”மாணவர்களுக்கு இரு மொழிகளிலும் புலமை வேண்டும்...இல்லையென்றால் இருமொழி ஒருமொழியாகிவிடும்”

”மாணவர்களுக்கு இரு மொழிகளிலும் புலமை வேண்டும்...இல்லையென்றால் இருமொழி ஒருமொழியாகிவிடும்”
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டு மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலம்பெற்றிருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பா.சிதம்பரம், பல ஆண்டுகளாக  தமிழக அரசு இருமொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, தமிழகத்தில் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலம்பெற்றிருக்க வேண்டும். தமிழ் எந்த அளவுக்கு சரளமாக பேச, எழுத முடிகிறதோ, அதே அளவுக்கு ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும். ஓரளவு வேறுபாடு இருக்கலாம், ஆனால் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதிலும் எழுதுவதிலும் மாணவர்கள் பின்தங்கிவிட்டால், இருமொழிக் கொள்கை என்பது ஒருமொழி கொள்கையாகிவிடும் என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், கணிதத்தின் முக்கியத்துவத்தால் தான் வள்ளூவர் எண்ணை முதலிலும், எழுத்தை 2 வதாகவும் குறிப்பிட்டார். ஏனென்றால் இனிவரும் காலங்களில் கணிதம் இல்லாமல் எந்தத்துறையையும் படிக்க முடியாது, எனவே மாணவர்களை கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் புலம் பெற்றவர்களாக மாற்ற வேண்டும் என ஆசிரியர்களுக்கு வலியுறுத்தினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com