புகார் எங்கே? நடவடிக்கை எங்கே? 'CM விஜய்' ஆய்வில் கள்ளக்குறிச்சி விவகாரம்.. நறுக்கென்று கேட்ட நீதிபதி!

காவல்துறை தரப்பில், "மாவட்ட ஆட்சியர் தலைமை செயலர் உட்பட இதுவரை யாரிடமும் புகார் அளிக்கவில்லை" என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.
Kallakurichi MLA Row: CM Vijay Reviews Issue
புகார் எங்கே? நடவடிக்கை எங்கே? 'CM விஜய்' ஆய்வில் கள்ளக்குறிச்சி விவகாரம்.. நறுக்கென்று கேட்ட நீதிபதி!AI Generated
Published on: 
Updated on: 
2 min read

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரம் தீவிரமடைந்து வருகிறது.

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த தேசிய மகளிர் ஆணையம், மாவட்ட ஆட்சியரின் புகாருக்காகக் காத்திருக்காமல் தாமாக முன்வந்து விசாரித்து, 7 நாள்களுக்குள் நடவடிக்கை அறிக்கை அளிக்கத் தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்யவும், டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாக்கவும் உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர். திரிசூலி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த விவகாரத்தில் அரசு விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

ஏன் புகார் அளிக்கவில்லை?

இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு இன்று (நவ. 23) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, "வெறும் செய்திகளின் அடிப்படையில் மட்டும் காவல்துறைக்கு எப்படி உத்தரவிட முடியும்? ஆட்சியர் தரப்பில் ஏதேனும் புகார் அளிக்கப்பட்டுள்ளதா? அல்லது அதற்கான ஆதாரங்கள் உள்ளனவா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குக் காவல்துறை தரப்பில், "மாவட்ட ஆட்சியர் தலைமை செயலர் உட்பட இதுவரை யாரிடமும் புகார் அளிக்கவில்லை" என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது உண்மையெனில் அது துரதிர்ஷ்டவசமானது எனக் குறிப்பிட்ட நீதிபதி, இது தொடர்பாக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரின் கருத்தைக் கேட்டு விளக்கம் அளிக்குமாறு அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளார்.

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

சென்னை உயர் நீதிமன்றக் கூடுதல் நீதிபதி விக்டோரியா கௌரி, மதுரையில் நடைபெற்ற பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் பேசியபோது, "சமீபத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, சட்டமன்ற உறுப்பினரிடமிருந்து தகாத குறுஞ்செய்திகள் வந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இது பணியிடத்தில் நடக்கும் துன்புறுத்தல் இல்லையா? ஆட்சியரின் கணவர் புகார் அளித்துள்ளார். ஆனால், மாநில காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" எனக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

நீதிபதி விக்டோரியா கௌரி,
நீதிபதி விக்டோரியா கௌரி,

முதலமைச்சர் ஆய்வு செய்கிறார்!

இதற்கிடையில், இன்று ஆதரவுக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார் முதலமைச்சர் விஜய். இந்த நிகழ்வில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதி சார்ந்த கோரிக்கை மனுக்களை அளித்து, முதலமைச்சரிடம் உரையாடியுள்ளனர்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் லதாவிடம் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, "முதல்வர் ஆய்வு செய்வதாகக் கூறியிருக்கிறார்" எனப் பதிலளித்தார்.

முன்னதாக, அமைச்சர் அருண் ராஜும் இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்தில் இருப்பதாகவும், ஆய்வு மேற்கொண்டு உண்மை இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேசியிருந்தார்.

இந்த விவகாரத்தில் தொடக்கம் முதலே குழப்பமான சூழல் நிலவுகிறது. ஆட்சியர் வெளிப்படையாகப் பேசாததும், அரசு சார்பில் வெளிப்படையான விளக்கம் அளிக்கப்படாததும் பொதுமக்களிடையே சந்தேகம் அதிகரிக்கக் காரணமாக உள்ளன.

Kallakurichi MLA Row: CM Vijay Reviews Issue
நம்பிக்கை இல்லாத் தீர்மானம், இடைத்தேர்தல்.. அவசரமாக ஆதரவு கட்சி MLA-களை சந்திக்கும் விஜய்.. மீண்டும் நெருக்கம் காட்டும் இடதுசாரிகள்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்