
அடுத்த ஆண்டு குடியரசு தின நிகழ்ச்சி நடைபெறுவது எங்கே ? - தமிழக அரசு இன்று ஆலோசனை ஈடுபட்டுள்ளது.
காந்தி சிலை முன்பு நடைபெறும் நிகழ்ச்சி:
வழக்கமாக ஆண்டுதோறும் மெரினா காந்திசிலை முன்பாக தான் குடியரசு தின நிகழ்ச்சி நடைபெறும். ஆனால், அங்கு தற்போது மெட்ரோ பணிகள் நடைபெறுவது காரணமாக, குடியரசு தின நிகழ்ச்சியை அடுத்த ஆண்டு(2023) அங்கு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆலோசனை:
இந்த பிரச்சனையை தொடர்ந்து, 2023 குடியரசு தின நிகழ்ச்சிகளை எங்கு நடத்தினால் பாதுகாப்பாக இருக்கும் என்பது குறித்து தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தமிழக அரசு முடிவு:
அந்த ஆலோசனை கூட்டத்தில், ஆண்டுதோறும் நடைபெறும் காமராஜர் சாலையிலேயே வேறு இடத்தில் குடியரசு தின நிகழ்ச்சிகளை நடத்தலாம் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
விவேகானந்தர் இல்லமா? உழைப்பாளர் சிலையா?:
அதன்படி, காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லம், மற்றும் உழைப்பாளர் சிலை என இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இரண்டில் எந்த இடம் குடியரசு தின நிகழ்ச்சிகளை நடத்த பாதுகாப்பான இடம் என்பதை முடிவு செய்ய தமிழக அரசின் உயர் அதிகாரிகள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
குடியரசு தின நிகழ்ச்சி நடைபெறுவது எங்கே?:
இந்நிலையில், தமிழக அரசின் உயர் அதிகாரிகள் குடியரசு தின நிகழ்ச்சிகளை பாதுகாப்பாக நடத்த விவேகானந்தர் இல்லத்தையே தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் குடியரசு தின நிகழ்ச்சி நடைபெறுவது எங்கே ? என்ற கேள்வி எழுந்துள்ளது.