

இன்று சென்னை தலைமை செயலகத்தில் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், தமிழ்நாடு நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியீட்டார். கடந்த 5 ஆண்டுகளின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இதில் தமிழகத்தின் நிதிநிலை, வருவாய்,செலவு விவரங்களை வெளியிட்ட அவர், வெள்ளை அறிக்கை முதலமைச்சர் விஜய்யின் வழிகாட்டுதலின் கீழ் வெளியிப்பிடப்படுவதாக குறிப்பிட்டார்.
தரவுகளை வெளியிட்ட பிறகு அதற்கான விளக்கம் கொடுத்த நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் “தமிழ்நாட்டின் வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது” என்று குறிப்பிட்டார். மேலும் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை 78,324 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், இது இதுவரை இல்லாத அதிகபட்சம் என்றும் தெரிவித்தார். மாநிலத்தின் சொந்த வரி முயற்சி 5.45 குறைந்துள்ளதகாவும், இது இதுவரை இல்லாத குறைந்த பட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் இருமடங்கு அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ 5 லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது ரூ 10 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளதாக தெரிவித்தார் நிதி அமைச்சர் மரியா வில்சன்.
தொடர்ந்து பேசிய அவர், 10 லட்சம் கோடி நேரடி கடன் இருப்பதாகவும், 78,324 கோடி வருவாய் பற்றாக்குறை உள்ளதாகவும், இந்தியாவின் முதன்மை மாநிலமாக இருந்த தமிழகத்தின் தற்போதைய வருவாய் சராசரிக்கும் கீழ் சரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டின் வட்டி, ஓய்வூதியம், ஊதியத்திற்கான செலவு 64 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளில் ஏற்பட்ட கடனை ஒப்பிட்டு பார்க்கும் போது கடந்த ஐந்து ஆண்டுகளில் கடன் அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்திற்கு மொத்தம் 13.18 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும், இது இந்த ஆண்டிற்கான வரம்பை நெருங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் "தமிழ்நாட்டின் தனிநபர் கடன் ரூ 1,28,934 ஆக உயர்ந்துள்ளது" என்றும் "தமிழகத்தில் பிறக்கும் குழந்தை கடனோடு பிறப்பதாகவும்" தெரிவித்துள்ளர். குஜராத் மற்றும் கர்நாடக போன்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி குறைவாக உள்ளதாகவும், தமிழக மின்வாரியத்திற்கு மட்டும் 2.5 கோடி கடன் உள்ளதாகவும், போக்குவரத்து கழகத்திற்கு 43, 865 கோடியாகவும் உள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் தமிழகத்தின் நிதி பற்றாக்குறையின் வரம்பு மீறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அண்டை மாநிலங்களை விட GST தமிழகத்தின் மிகவும் குறைவு என்று குறிப்பிட்ட அவர் தமிழகம் வளர்ச்சி சரிந்துள்ளதாக குறிப்பிட்ட அவர் தமிழக வருவாய் ரூ 100 ஆக இருந்தால் செலவு 145 ரூபாய் ஆகி இருப்பதாகவும் தெரிவித்தார்.
இறுதியாக அமைச்சர் மரிய வில்சன், இந்த வருவாய் இழப்பை ஊழலற்ற நிர்வாகத்தின் மூலம் சரி செய்வோம் என நம்பிக்கை தெரிவித்தார். ஆண்டுக்கு வட்டியாகவே 67,050 கோடி செலவிடப்படுவதாகவும், இனி வரும் காலங்களில் குறைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். வருவாய் கசிவை சரி செய்தலே இந்த நிலையை சரி செய்யலாம் எனவும் ஊழலற்ற ஆட்சியே முதல்வர் விஜயின் நோக்கம் என்றும் அதை தற்போதைய அரசு நிறைவேற்றும் என்றும் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.