உத்திரமேரூரில் வெற்றி யாருக்கு? அனல் பறக்கும் தொகுதி ரிப்போர்ட்!

சுமார் 90 வாக்குச்சாவடிகள் யாருக்கு வேண்டுமானாலும் மாறக்கூடிய ஸ்விங் பூத்களாக உள்ளன
Uthiramerur constituency
Published on
Updated on
2 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தின் உத்திரமேரூர் தொகுதி, வரலாற்றிலும் அரசியலிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாகும். தற்போதைய திமுக எம்எல்ஏ சுந்தர் மக்கள் மத்தியில் நீண்ட காலத் தொடர்பில் இருந்தாலும், அதிமுக மற்றும் பாமகவின் கூட்டணி பலம் இந்தத் தொகுதியில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் எனத் தெரிகிறது.

உத்திரமேரூர் தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களாக 41 முதல் 60 வயதுடையவர்கள் 38.4 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 31.9 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியாக ஆதிதிராவிடர்கள் 28 சதவீதமும், வன்னியர்கள் 27 சதவீதமும், முதலியார்கள் 16 சதவீதமும் உள்ளனர். 75 சதவீத கிராமப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் சமூக வாக்குகளே வெற்றியாளரைத் தீர்மானிக்கின்றன. கிராமப்புற மக்கள் அதிகம் என்பதால் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளே இங்கு பிரதானமாக உள்ளன.

Uthiramerur constituency

முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாக விவசாயம் மழையைச் சார்ந்தே இருப்பதால் வருமானம் உறுதியற்ற நிலையில் உள்ளதாக மக்கள் புகார் கூறுகின்றனர். ஏரிகள் மற்றும் குளங்கள் பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்துள்ளன. இளைஞர்கள் வேலைவாய்ப்புத் தேடி நகரங்களுக்கு இடம் பெயரும் அவலம் நீடிக்கிறது. அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் போதுமான பணியாளர்கள் இல்லாமை மற்றும் கிராமப்புறச் சாலைகளின் அவலநிலை போன்றவை உத்திரமேரூர் மக்களின் நீண்ட காலக் குறையாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

உத்திரமேரூர் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

தேர்தல் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2021-ல் திமுக 44.6 சதவீத வாக்குகளைப் பெற்றது, அது 2024-ல் 45 சதவீதமாகச் சற்றே உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 43 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024-லும் 45 சதவீதத்தையே தக்கவைத்துள்ளது. பூத் அளவில், 2021-ல் திமுக 120 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் 127 ஆக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 116 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 101 பூத்களாகக் குறைந்துள்ளது. சுமார் 41 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன.

2026 தேர்தல் கணிப்பின்படி, உத்திரமேரூரில் அதிமுக 125 வாக்குச்சாவடிகளில் வலுவாக உள்ளது. திமுக 115 வாக்குச்சாவடிகளில் தனது பலத்தைக் கொண்டுள்ளது. சுமார் 90 வாக்குச்சாவடிகள் யாருக்கு வேண்டுமானாலும் மாறக்கூடிய ஸ்விங் பூத்களாக உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் முடிவுகளின்படி, 2026-ல் அதிமுக 34 சதவீத வாக்குகளைப் பெறும் எனத் தெரிகிறது. திமுக 33 சதவீத வாக்குகளைப் பெற்று கடும் போட்டியை அளிக்கிறது. தவெக மற்றும் நாம் தமிழர் கூட்டணி 27 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. வெற்றி வித்தியாசம் சுமார் 1 முதல் 2 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்பதால், கடும் போராட்டம் நிலவுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com