தேமுதிக போராட்டத்தில் மீதமான உணவை உட்கொண்டதால் வாந்தி, மயக்கம்!!

தேமுதிக போராட்டத்தில் மீதமான உணவை உட்கொண்டதால் வாந்தி, மயக்கம்!!

Published on

விருத்தாச்சலம் தேமுதிக போராட்டத்தில் மீதமான உணவை சாப்பிட்ட  30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.

நேற்று விருத்தாச்சலத்தில் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்பொழுது அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு  வழங்கப்பட்டது. அதில் மீதமான உணவை முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள பொது மக்களுக்கு அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் குமார் என்பவர் கொடுத்துள்ளார்.

இரவு இந்த சாப்பாட்டை சாப்பிட்ட அந்த கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள், பெரியவர்கள் என 30 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நள்ளிரவில் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com