ஆளுநரை ஏன் வம்புக்கு இழுக்குறிங்க ?...அண்ணாமலை....!!!

தமிழகத்தில் அரசியல் பேச எத்தனையோ  விசியங்கள் இருக்கும் போது ஆளுநரை ஏன் வம்பு சண்டைக்கு இழுக்கிறார் என்று தெரியவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆளுநரை ஏன் வம்புக்கு இழுக்குறிங்க ?...அண்ணாமலை....!!!
Published on
Updated on
1 min read

மகாகவி பாரதியாரின் 140- வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பாரதியார் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,  தலைமை தளபதி பிபின் ராவத் உடலிக்கு தமிழக ஆளுநர் நேரில் சென்று  அஞ்சலி செலுத்தாது தவறு இல்லை, என்றும் தமிழகத்தில் அரசியல் பேச எத்தனையோ   விசியங்கள் இருக்கும் போது ஆளுநரை ஏன் வம்பு சண்டைக்கு இழுக்கிறார் என தெரியவில்லை என்றார்.

முப்படை தலைமை  தளபதி  உள்பட 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக   வாட்ஸ் அப்பில் தவறாக பேசிய திமுகவை சேர்ந்த 30- க்கும் மேற்பட்டவர் குறித்த  தகவல் உள்ளது என கூறிய அவர்,மாரிதாஸை விட 100 மடங்கு மோசமான பேசி உள்ளனர், ஆனால் இங்குள்ள அரசுக்கு அது கண்ணுக்கு தெரியாது, தேசியவாத  கருத்து  சொல்லும் பொது பெரிதாக பேசுகின்றனர் என கூறினார்.

தமிழ்நாட்டில் காவல்துறை டி.ஜி.பி.யின் கட்டுப்பாட்டில் இல்லை, தமிழக காவல்துறை டி.ஜி.பி.கையில் இருந்து நழுவி விட்டது என்றும் சைகிளில் போவதும்  செல்பி எடுப்பதும் டி.ஜி.பி பணியாக உள்ளது என்றும் தமிழகத்தில்  காவல்துறையை நடத்துவது திமுக மாவட்ட செயலாளர்கள்  என  கடுமையாக விமர்சித்தார்.

திமுக என்ற கார்ப்ரேட் கம்பெனியை நடத்த தான் காவல்துறை பயன்படுத்தப்படுகிறது என அப்போது தெரிவித்தார்.

காவல்தறை ஒரு கட்சியை சார்ந்த ஏவல் துறையாகவும்,  ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது என தமிழக காவல்துறை குறித்து விமர்சித்த அவர், எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம், என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com