பழங்களை ரூசி பார்த்த பாகுபலி - பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறையினர்

பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள்ளும்,இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.
wild elephant baahubali eat water melon in mettupalayam
wild elephant baahubali eat water melon in mettupalayamAdmin
Published on
Updated on
1 min read

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி,நெல்லித்துறை,சமயபுரம்,ஓடந்துறை,பாலப்பட்டி, வச்சினம்பாளையம்,சிறுமுகை லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே காட்டு யானை பாகுபலியின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த யானை பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள்ளும்,இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

அவ்வாறு வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானை பாகுபலி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது

இந்த நிலையில் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் சாலையோரத்தில் தர்ப்பூசணி கடை போடப்பட்டுள்ளது இரவு நேரம் காட்டை விட்டு வெளியே வந்த காட்டு யானை பாகுபலி தர்ப்பூசணி கடையை பார்த்த உடன் அங்கு சென்று பழங்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.

இது குறித்து மேட்டுப்பாளையம் வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது உடனடியாக அங்கு சென்ற வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை காட்டிற்குள் விரட்டினார்.

காட்டு யானை பாகுபலி தர்ப்பூசணி எடுத்து சாப்பிடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com