சும்மா சாப்பிட்டு போலாம்னு வந்தோம்… ஊருக்குள் புகுந்த யானைகள்…!  

கோவை நரசிபுரம் ஆத்தூர் பகுதிக்கு இரவு உணவு தேடி வந்த 2 யானைகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சும்மா சாப்பிட்டு போலாம்னு வந்தோம்… ஊருக்குள் புகுந்த யானைகள்…!   
Published on: 
Updated on: 
1 min read

கோவை நரசிபுரம் ஆத்தூர் பகுதிக்கு இரவு உணவு தேடி வந்த 2 யானைகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வேட்டைக்காரன் கோயில் பகுதியில் இருந்து இரண்டு ஆண் யானைகள் காட்டை விட்டு வெளியே வந்து இருப்பதாக நேற்று இரவு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் இரண்டு யானைகளையும்  வனத்துறையினர் பின்தொடர்ந்து சென்றதில் அவை நரசிபுரம், சிறுவாணி பைப்லைன், கருப்பராயன் கோவில் வழியாக நெருஞ்சி காடு கல்ககுழி பகுதிக்கு காலை வந்ததடைந்தது.

பின்னர் 10 மணி நேர போரட்டத்திற்கு பிறகு யானைகளை வனத்துறையினர் பத்திரமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com