
நீதிமன்ற உத்தரவுப்படி, சொத்து உத்தரவாதம் தாக்கல் செய்யாத நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்குவது தொடர்பாக மனுத்தாக்கல் செய்ய படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
படத்தில் நடிப்பதற்காக பெற்ற 6 கோடி ரூபாய் முன் பணத்தை திரும்ப தர நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடக்கோரி பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 5 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான சொத்து உத்தரவாதத்தை ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்டிருந்தது
இந்நிலையில், நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், நீதிமன்ற உத்தரவின்படி, நடிகர் ரவி மோகன், சொத்து உத்தரவாதத்தை தாக்கல் செய்யவில்லை எனவும் அதனால் அவரது சொத்துக்களை முடக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.