அணைக்கட்டு தொகுதியில்.. திமுகவின் பிடியை உடைக்குமா அதிமுக? - கருத்துக் கணிப்பு முடிவுகள்!

தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மற்ற அணிகள் இணைந்து சுமார் 18 சதவீத வாக்குகளைப் பிரிக்கக்கூடும்
anaikattu constituency
Published on
Updated on
2 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் அணைக்கட்டு தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான அணைக்கட்டு, திரௌபதி அம்மன் கோயில் மற்றும் தெருக்கூத்து கலைகளுக்குப் பெயர்பெற்ற ஒரு பாரம்பரியமிக்க பகுதியாகும். மலைக் கிராமங்கள் மற்றும் விவசாயத்தைப் பின்னணியாகக் கொண்ட இந்தத் தொகுதியில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அணைக்கட்டு தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களை ஆய்வு செய்ததில், 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் 13.5 சதவீதம் பேரும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 31.9 சதவீதம் பேரும் உள்ளனர். 41 முதல் 60 வயதுடையவர்கள் 36.9 சதவீதமாகவும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 17.5 சதவீதமாகவும் உள்ளனர். சமுதாய ரீதியாக நாயுடு சமுதாயத்தினர் 28 சதவீதம் பேர் முதன்மையாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக முதலியார் 24 சதவீதம், ஆதிதிராவிடர்கள் 18 சதவீதம் மற்றும் யாதவர்கள் 10 சதவீதம் எனப் பரவலாக உள்ளனர். இது 65 சதவீதம் கிராமப்புறங்களையும், 35 சதவீதம் நகர்ப்புறங்களையும் உள்ளடக்கிய ஒரு தொகுதியாகும்.

அணைக்கட்டு தொகுதி பற்றிய முழு தேர்தல் கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

இங்கு நிலவும் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாக மலைக் கிராமங்களுக்கான முறையான தார்ச்சாலை வசதிகள் இல்லாதது மற்றும் காட்ட யானைகளால் ஏற்படும் உயிர்ச் சேதங்கள் பெரிய குறையாக உள்ளது. ஆறுகளில் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் மலைப்பகுதிகளில் செல்போன் சிக்னல் கிடைக்காமல் மாணவர்கள் ஆன்லைன் படிப்பில் சந்திக்கும் சிரமங்கள் வேதனையாக உள்ளன. மலைக் கிராமங்களுக்குக் கூடுதல் நடமாடும் மருத்துவமனைகள் மற்றும் அவசர ஊர்திகள் வேண்டும் என்பதும், விளைபொருட்களுக்கு அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்பதும் மக்களின் நீண்ட காலக் கோரிக்கைகளாக உள்ளன.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, திமுகவின் ஏ.பி. நந்தகுமார் 47.9 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணி 44.7 சதவீத வாக்குகளைப் பெற்றது. அந்தத் தேர்தலில் திமுக 166 பூத்களில் வலுவாகவும், அதிமுக 119 பூத்களில் வலுவாகவும் இருந்தது. சுமார் 48 பூத்கள் ஸ்விங் நிலையில் இருந்தன. தொடர்ந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 44.7 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், அதிமுக கூட்டணி 46.25 சதவீத வாக்குகளைப் பெற்றுத் தனது பலத்தை நிரூபித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது 'கான்சிலிடிக்ஸ்' குழுவினர் நடத்திய 2026 தேர்தல் கணிப்பின்படி, அணைக்கட்டு தொகுதியில் திமுக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. வரும் தேர்தலில் திமுக கூட்டணி 40 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 37 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என்று தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மற்ற அணிகள் இணைந்து சுமார் 18 சதவீத வாக்குகளைப் பிரிக்கக்கூடும். பூத் வாரியான தரவுகளின்படி, தற்போது திமுக 132 பூத்களில் வலுவான நிலையில் உள்ளதாகவும், அதிமுக 110 பூத்களில் வலுவாக உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சுமார் 75 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளதால் அங்கு கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com