ஜெயலலிதாவின் புதிய சகோதரரின் மனு....விசாரணைக்கு ஏற்குமா நீதிமன்றம்?!!

ஜெயலலிதாவின் புதிய சகோதரரின் மனு....விசாரணைக்கு ஏற்குமா நீதிமன்றம்?!!
Published on
Updated on
1 min read

ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு, அவரது சகோதரர் எனக் கூறி மைசூருவைச் சேர்ந்த 83 வயது முதியவர் தாக்கல் செய்த வழக்கை, விசாரணைக்கு ஏற்று சென்னை உயர்நீதிமன்ற  மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசு என்று அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோரை அறிவித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.  இந்நிலையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பின், ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி மைசூருவைச் சேர்ந்த 83 வயது முதியவர் என்.ஜி.வாசுதேவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், தனது தந்தை ஜெயராமனின் இரண்டாவது மனைவியின் மகளான ஜெயலலிதாவின் சொத்தில் தனக்கு 50 சதவீதம் பங்கு தர தீபா, தீபக்குக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.  காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்ட, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றம் விசாரித்தது.
 
காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால்,  அதை  விசாரணைக்கு ஏற்கலாமா, வேண்டாமா? என்பது குறித்து பதில் அளிக்கும்படி ஜெ.தீபா, ஜெ,தீபக் ஆகியோருக்கு மாஸ்டர் நீதிமன்றம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பிருந்தது.  ஆனால்,  இருவரும் பதில் மனு தாக்கல் செய்யாததால் ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு முதியவர் வாசுதேவன் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு  மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com