
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பத்தளப்பள்ளியை சேர்ந்தவர் ஹரிநாத். இவர் தனது தந்தை பெயரில் உள்ள நிலப் பட்டாவை 5 உட்பிரிவுகளாக மாற்ற சர்வேயர் அலுவலகம் சென்றுள்ளார்.
அப்போது ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஹரிநாத்திடம் லஞ்சம் பெற்றபோது சர்வேயர் வடிவேலு மற்றும் இடைத்தரகர் தமீஸ் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
இதேபோல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தந்தை பெயரில் உள்ள நிலத்துக்கு தடையில்லாச் சான்று கேட்டு ராஜேந்திரன் என்பவர் விண்ணப்பித்துள்ளார். இதற்கு கோட்டாட்சியர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் மகேந்திர வில்சன் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார்.