தமிழகத்தில் 24 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு ; அசுரவேக பாதிப்பால் ஒரே நாளில் 26 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு, 23 ஆயிரத்தை தாண்டியதால், பொதுக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் 24 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு ; அசுரவேக பாதிப்பால் ஒரே நாளில் 26 பேர் உயிரிழப்பு
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று புதிதாக ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 46 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதில் 23 ஆயிரத்து 459 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு, அசுர பாய்ச்சலில் தொற்று உயர்ந்து கொண்டே செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், மேலும் எட்டாயிரத்து 963 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  28 லட்சத்து 91 ஆயிரத்து 959 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து மேலும் ஒன்பதாயிரத்து 26 பேர் குணமடைந்தனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் இதுவரை 27 லட்சத்து 36 ஆயிரத்து 986  பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 17 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம், தீவிர கொரோனா பாதிப்பால் 26 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 956 ஆக உயர்ந்துள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com