“5 சென்ட் நிலம் தாரேன்.. வா..” சைக்கோ மாமனாரின் டார்ச்சர்.. மருமகள் எடுத்த விபரீத முடிவு..!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வீர மச்சான்பட்டி கிராமத்தில் கடந்த பத்து ஆண்டு காலத்திற்கு முன் ..
accust
accust
Published on
Updated on
1 min read

5 சென்ட் நிலம் தாரேன் கணவன் மனைவி போல் வாழலாம் தகாத உறவுக்கு அழைத்து மாமனார் மருமகள் மீது அத்து மீறி பாலியல் சீண்டல் 

அவமானம் தாங்க முடியாமல் உடலில் தீப்பற்ற வைத்து தீயிட்டு தற்கொலை 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வீர மச்சான்பட்டி கிராமத்தில்   கடந்த பத்து ஆண்டு காலத்திற்கு முன்  அதே கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் ரஞ்சிதம் ஆகியோருக்கு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு  திருமண நடைபெற்று தற்போது தலா ஒரு மகன் மகள் இரண்டு குழந்தைகளுடன் அதே கிராமத்தில் கணவர் முனீஸ்வரன் வீட்டில்  மாமியார் மாமனாருடன்  கூட்டுக் குடும்பமாக வசித்து வாழ்ந்து வருகின்றனர்.

ரஞ்சிதம் கணவர் முனீஸ்வரன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாக கூறப்படுகிறது.

தனது மகன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மாமனார் அண்ணாதுரை தனது மகன் மனைவியை மருமகள் மீது காமம் மோகம் கொண்டு தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தி தகாத உறவில் ஈடுபட முயற்சித்ததாக பாலியல்  சீண்டலில் ஈடுபட்டதால் ரஞ்சிதம் இணங்க மறுத்ததால் உனக்கு ஐந்து சென்ட் நிலம் தருவதாகவும் கணவன் மனைவி போல் தாம் வாழ்ந்து குடித்தனம் நடத்துவோம் என ரஞ்சிதத்தை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி ரஞ்சிதம் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது பின்னால் வந்து மாமனார் அண்ணாதுரை கட்டியணைத்து பாலியல் சீண்டலில் வற்புறுத்தியுள்ளார்

இந்த நிகழ்வை முதலில் தனது கணவர் முனீஸ்வரனிடம் உனது தந்தை எனது மாமனார் செயல்பாடு குறித்து கூறிய நிலையில் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்ததாக அந்த நிகழ்வை கடந்து சென்றதாக கூறப்படுகிறது 

இந்நிலையில் தனது பெற்றோரிடம் தனது மாமனாரின் செயல்பாடு குறித்து கணவரிடம் கூறினேன் அதற்கு அவர் அப்பாவை கண்டிக்கவில்லை அதனால் நான் இனிமேல் வாழ்ந்து பயனில்லை அதனால் தற்கொலை செய்து கொள்வதாக வேதனை தெரிவித்து சென்றதாக கூறப்படுகிறது

அதற்கு ரஞ்சிதத்தின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று அனுப்பி வைத்த நிலையில் திடீரென ரஞ்சிதம் அவமானம் தாங்க முடியாமல் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார் 

இது குறித்து பெருநாழி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது போலீசார் வழக்கு பகுதி செய்து தற்கொலை செய்து கொண்ட ரஞ்சிதம் மற்றும் அவரின் பெற்றோர்களின்  வாக்குமூலம் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிச் சென்ற மாமனார் அண்ணாதுரை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து  தேடி வருகின்றனர் 

தற்கொலை செய்து கொண்ட ரஞ்சிதத்தின் உடல் மதுரை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com