மகளிர் உரிமைத் தொகைதிட்டம்: விடுபட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம்!!

 மகளிர் உரிமைத் தொகைதிட்டம்: விடுபட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம்!!
Published on
Updated on
1 min read

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறவுள்ளது.

பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் முக்கிய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

அன்றைய தினம் இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிலையில் அன்றைய தினமே தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பயனாளர்களுக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட வேண்டும் என்று அவா் உத்தரவிட்டுள்ளாா். இதன் காரணமாக விரைவாக பணிகளை முடிக்க அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 54 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தில் பதிவு செய்யாதவர்களுக்காக இன்று முதல் வரும் 20-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

அதன்படி இத்திட்டத்தில் விடுபட்ட நபர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com