
2000 தொழிலாளர்களுக்கு காசோலை
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் (TAW) காலனி மற்றும் டேனரி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் வருங்கால வைப்பு நிதி தொகையை தொழிற்சாலை நிர்வாகம் கடந்து 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் இரு கட்டமாக சுமார் 2000 தொழிலாளர்களுக்கு காசோலையாக வழங்கியுள்ளது.
பணம் பெற முடியாமல் தொழிலாளர்கள் அவதி
அதற்கான தொகையை வங்கியில் நிர்வாகம் செலுத்தாததால் காசோலையில் இருந்து பணம் பெற முடியாமல் தொழிலாளர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர் மேலும் தொழிலாளர்களுக்கு வழங்கிய காசோலை போலி காசோலை ஆனதால் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பணம் பெற முடியாமல் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நிர்வாகத்தின் மீது நடவடிக்கை
இந்நிலையில் தொழிலாளர்களுக்கு காசோலை கொடுத்து ஏமாற்றிய தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்தும் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பணத்தைப் பெற்றுத் தர அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லும் வகையில் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் நாகப்பன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாவடி அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதற்கும் நிர்வாகம் மற்றும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் தொழிலாளர்களை திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக எச்சரிக்கை விடுத்தனர்