தமிழ்நாட்டில் 36 மருத்துவக் கல்லூரிகளுக்கும் மத்திய அரசு அனுமதி - மா.சுப்பிரமணியன்!

தமிழ்நாட்டில் 36 மருத்துவக் கல்லூரிகளுக்கும் மத்திய அரசு அனுமதி - மா.சுப்பிரமணியன்!

Published on

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 


உலக வெண்புள்ளிகள் தினத்தை ஒட்டி, வெசென்னை சைதாப்பேட்டையில் உள்ள வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியில் வெண் புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, மாணவர்கள் இடையே உறுதி மொழி ஏற்றார்.  

நிகழ்ச்சியில் பேசிய அவர்,  2025-ம் ஆண்டுக்குள், காசநோய் இல்லாத மாநிலமாகவும், 2030-ம் ஆண்டில், தொழுநோய் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஜூலை 4-ம் தேதி நடைபெறும் என்று கூறினார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவித்தவர், சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்பி வருவதாக  மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com