புனித தலங்களில் குவிந்து வரும் பக்தர்கள் கூட்டம்...தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார்!

புனித தலங்களில் குவிந்து வரும் பக்தர்கள் கூட்டம்...தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார்!

Published on

தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தில் அமைந்துள்ள ஏராளமான புனித தலங்களில் பக்தர்கள் முன்னோருக்கு தர்ப்பணம் வழங்கி வழிபட்டனர். 

தை அமாவாசை வழிபாடு :

தை அம்மாவாசையை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலத்தில் அருவி கரையில் இன்று அதிகாலை முதலே பல ஆயிரம் மக்கள் புனித நீராடினர். தொடர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு புரோகிதர்கள் வேத மந்திரங்களை முழங்க எள், தண்ணீர் இறைத்து தர்ப்பணம் கொடுத்து சென்றனர்.

அதேபோல், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் குவிந்த ஏராளமான பக்தர்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கி இறைவனை வழிபட்டு சென்றனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் சன்னதிகடல் மற்றும் கோடியக்கரை ஆதிசேது கடலில்  ஏராளமான பக்தர்கள் பச்சை, அரிசி, காய்கறிகள், பழங்கள், வெற்றிலை பாக்கு உள்ளிட்டவைகளை வைத்து  முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம்  செய்தனர். 

அதேபோல், மதுரை இன்மையிலும் நன்மை தருவார் கோயிலில் அதிகாலை 3 மணியிலிருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சிவனை வணங்கி மகிழ்ந்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com