இன்று தொடங்குகிறது 2- ஆம் நிலை காவலருக்கான எழுத்துத் தேர்வு...!

இன்று தொடங்குகிறது 2- ஆம் நிலை காவலருக்கான எழுத்துத் தேர்வு...!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் 2022-ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது. 

இரண்டாம் நிலை காவலர் பதவியில் ஆயிரத்து 526 ஆண்கள், 654 பெண்கள் என 2 ஆயிரத்து180 பேர், சிறப்பு காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை என மொத்தம் 3 ஆயிரத்து 552 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், ஹால்டிக்கெட்டுகளில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கொண்டு வரவேண்டும், செல்போன், ஸ்மாட் வாச், புளுடூத் போன்றவைகளை கொண்டு வரக்கூடாது என்பன உள்ளிட்ட  பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து வசதி செய்யபட்டுள்ளது குறிப்பிடதக்கது .

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com