கொசஸ்தலை ஆற்றில் மஞ்சள் நிற கழிவு ; மீனவர்கள் கவலை

கொசஸ்தலை ஆற்றில் மஞ்சள் நிற கழிவு ; மீனவர்கள் கவலை
Published on
Updated on
1 min read

சென்னை, எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மஞ்சள் நிற கழிவுகள் மிதப்பதால் மீனவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சுமார் 15-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கி வரும் இந்த ஆற்றில் தற்போது  மஞ்சள் நிற கழிவுகள் மிதப்பதை கண்ட மீனவ மக்கள், மீன் மற்றும் இறால் இனப்பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படும் என கவலை தெரிவித்துள்ளனர். அதோடு, கழிவுநீர் வெளியேற்றத்திற்கு காரணமான தொழிற்சாலைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சென்னை எண்ணூர் பகுதியில் இருக்கும் கொற்றலை எனப்படும் கொசஸ்தலை ஆற்றினை  நம்பி தான் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் சுமார் 15க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தினர் தொழிலை நடத்தி வாழ்வாதாரங்களைப்  பெருக்கி வருகின்றனர்.. 

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொற்றலை ஆற்றில் மஞ்சள் நிறத்தில்  கழிவு நீர் கலந்ததால் மீனவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். 

அதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஆற்றில் மஞ்சள் நிறத்தில் கழிவு நீர் கலந்து வருகிறது. இந்த கழிவு நீர் இப்படியே கலந்து கொண்டிருந்தால் மீன்கள் மற்றும் இறால்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் இருப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர்.. 

மேலும் அருகாமையில் அமைந்திருக்க கூடிய தொழிற்சாலைகளில் இருந்து இதுவெளியேறி வருகிறதா என்றும் உடனடியாக மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com