அந்தப் புள்ள பொணத்தையாவது வீட்ல கொடுத்துடுங்க : கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த இளம் காதல் ஜோடி!!

திருப்பூரில் இளம் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் புள்ள பொணத்தையாவது வீட்ல கொடுத்துடுங்க : கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த இளம் காதல் ஜோடி!!
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் கரமக்குடி பகுதியை சேர்ந்த திருப்பதி - சந்தியா தம்பதியினர், திருப்பூர் வீரபாண்டி, பழக்காரர் தோட்டம் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் சரண் என்பவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், சரணும் அவரது தூரத்து உறவுக்காரப் பெண்ணான வினிதா என்பவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த மாதம் வினிதாவும், சரணும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரும் திருப்பூரில் வசித்து வந்த நிலையில், சரண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு திருமணம் நடைபெற்று விட்டதாக பதிவிட்டுள்ளார். இதனிடையே வினிதாவின் தந்தை தனது மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் காரணமாக சரணின் தந்தை காதல் ஜோடியை கண்டித்துள்ளார்.

இதனால், தங்களை பிரித்து விடுவார்கள் என்று எண்ணி, சரண் மற்றும் வினிதா இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாருக்கு கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில் ’நாங்கள் தான் எல்லா பிரச்னைக்கும் காரணம். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை’ என்று சரண் எழுதியிருந்தது’ குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com