சோதனைச்சாவடியில் போலீசாரை தாக்கும் இளைஞர்கள்... வைரலாகும் வீடியோ...

வத்தலகுண்டு அருகே சோதனை சாவடியில் இளைஞர்கள் போலீசாரை  தாக்கும்   வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோதனைச்சாவடியில் போலீசாரை தாக்கும் இளைஞர்கள்... வைரலாகும் வீடியோ...
Published on
Updated on
1 min read
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே   விரு வீடு காவல் நிலைய சோதனை சாவடியில் இளைஞர்கள்  போலீசார்  கட்டைகளுடன் மோதிக்கொள்ளும் காட்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விருவீடு காவல் நிலைய  சோதனை சாவடியில் போலீசார் மற்றும் இளைஞர்கள் மோதிக்கொள்ளும் வீடியோ சமூக தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உசிலம்பட்டி அருகே நல்ல தேவன்பட்டி  கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர்கள் முத்துமாணிக்கம் ரஞ்சித் காளிதாஸ் உள்ளிட்ட ஆறு பேர் இருசக்கர வாகனத்தில் வத்தலக்குண்டு வந்துள்ளனர். அப்போது உசிலம்பட்டி சாலையில் விருவீடு காவல் நிலைய சோதனைச்சாவடி அருகே அவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்த போது அவர்களின் வாகனம் ஒன்று போலீசார் அமைத்திருந்த  சோதனைச்சாவடி பேரிகார்டு மீது மோதியது. 
அப்போது அங்கிருந்த போலீசார் அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது எதிர்பாராதவிதமாக போலீஸாருக்கும் அந்த இளைஞர் இயக்கம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இருவரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவானது. உடனே இளைஞர் அருகில் இருந்த தென்னம் மட்டையை எடுத்து போலீசாரை தாக்க தொடங்கினார் இதனையடுத்து போலீசாரும் அந்த இளைஞர்களுடன் மல்லு கட்ட  தொடங்கியுள்ளனர் 
இந்நிலையில் போலீசார் மீது தாக்குதல் நடத்தி இளைஞர்கள் முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் போலீசார் மற்றும் இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி  பெரும் வைரலாகி வருகிறது.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com