திருமணமான ஐந்தே நாளில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை... !

திருமணமான ஐந்தே நாளில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை... !

திருவிடைமருதூர் அருகே திருமணம் ஆன ஐந்தே நாளில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை...
Published on

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள கோவில் சன்னாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரசாத் (30). வெளிநாட்டில் வேலை பார்த்து ஊர் திரும்பியவர். இவருக்கு கடந்த 5 ஆம் தேதி பந்தநல்லூர் காமாட்சிபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர் கடந்த இரண்டு தினங்களாக மனைவியுடன் சரியாக பேசாமல் மது அருந்தி வந்துள்ளார். இதனை பிரசாத் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு, தூக்கிட்டு கொண்டார். பின்னர் அவரை மீட்டு திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பிரசாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். திருமணமான ஐந்தே நாளில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com