8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர், போக்சோ சட்டத்தில் கைது...

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் கூலித்தொழிலாளியின் 8 வயது மகள் அங்கு உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த சிறுமியிடம் அதே பகுதியில் உள்ள 26 வயது இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெற்றோர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில், காங்கேயம் மகளிர் காவல்துறையினர் அந்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர், போக்சோ சட்டத்தில் கைது...
Published on
Updated on
1 min read

காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் சக்தி நகர் பகுதியில் வசித்து, டிரைவர் வேலை செய்து வரும் தம்பதிகளுக்கு எட்டு வயதில் ஒரு மகளும், மூன்று வயதில் இளைய மகளும் உள்ளனர். அவர்களது மூத்த மகள் வெள்ளகோவில் அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கணவர் சரிவர வேலைக்கு செல்லாமலும், குழந்தைகளை கவனித்து கொள்ளாமல் இருப்பதாலும், தாய் தான் வேலைக்குச் சென்று குடும்பத்தையும் நடத்திக் கொண்டு, குழந்தைகளையும் பார்த்து வரும் சூழல் இருந்துள்ளது.

இந்நிலையில் மூத்த மகள், நேற்று முன் தினம் பள்ளிக்குச் சென்ற வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அச்சம் அடைந்த சிறுமியின் தாய் அக்கம் பக்கத்தில் தேடி வந்துள்ளார். அப்போது அந்த சிறுமி, தன்னை ஒருவர் சுவற்றில் மோதி காயப்படுத்தி, பாலியல் சீண்டல் செய்ததாக தெரிவித்துள்ளார். 

பின்னர் அந்த சிறுமிக்கு வெள்ளகோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையும், பின் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியின் பெற்றோர் புகார் அளித்த நிலையில், அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டவர் யார் என்று வெள்ளகோவில் காவல்துறை மற்றும் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் துறையினர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் விசாரணையில்  ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு  இடமாக அப்பகுதியில் சுற்றித்திரிந்த சதீஷ் என்ற நபரை பிடித்து விசாரித்தத்தில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

அந்த சிறுமி அடையாளம் காண்பித்ததில், சதீஷ், பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் துறையினர் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதை தொடர்ந்து சதிஷ் திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார் . மேலும் இவர் மீது பல வழக்குகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com