இலக்கியா தற்கொலைக்கு நான் காரணமா!? திலீப் சுப்பராயன் பரபர!!

6 வருஷமா அவன்கூட மட்டும்தான் இருக்கேன். நெறைய பொண்ணுங்க கூட பழக்கம் இருக்கு....
dhilip subarayan
dhilip subarayan
Published on
Updated on
1 min read

டிக்டாக் செயலியில் டபுள் மீனிங் வசனம் மற்றும் அடல்ட் பாடல்களுக்கு வீடியோ செய்து பிரபலமானவர் இலக்கியா. டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட பிறகும் இன்ஸ்டாகிராம் செயலி மூலம்  கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வந்தார்.

இவரின் இந்த கவர்ச்சியான தோற்றம் இவரை மேலும் பிரபலமாக்கியது.

“நீ சுடத்தான் வந்தியா” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஆனால் பல காரணங்களால் இப்படம் வெளியாகாமல் போனது. நடிகையான பிறகும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாகவீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர் “ என்  சாவுக்கு காரணம் திலீப் சுப்பராயன் தான் என இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்து விட்டு, அளவு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டதாக் தெரிகிறது.

இந்த திலீப் சுப்பராயன் தமிழ் திரையுலகின் பிரபல சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் மகன் ஆவார்.

தற்போது இவரும் சினிமாவில் ஸ்டன்ட் மாஸ்டராகப் பணியாற்றி வருகிறார். 'சுந்தரபாண்டியன்', 'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'ஜில்லா', 'புலி', 'தெறி', 'வாரிசு', 'கோட்' 'விஸ்வாசம்', 'காப்பான்', 'தீரன்', 'வடசென்னை' உள்ளிட்ட பல படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்

“இலக்கியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “என் சாவுக்கு திலீப் சுப்பராயன் மட்டும்தான் கரணம். 6 வருஷமா அவன்கூட மட்டும்தான் இருக்கேன். நெறைய பொண்ணுங்க கூட பழக்கம் இருக்கு.  அதை நான் தட்டி கேட்டா  என்ன அடி அடினு போட்டு அடிப்பான்.  நானும் பொறுத்து பொறுத்து பார்த்துட்டேன் என்னால முடியல” என இன்ஸ்டாவில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்,  இந்த குற்றச்சாட்டு முற்றிலும் மறுத்துள்ளார். திலீப். “இவரின் தற்கொலை முயற்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.  என் மீதான காழ்புணர்ச்சியால் யாரோ இப்படி செய்கின்றனர். இதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com