எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்? வாங்க பேசலாம் - சமுத்திரக்கனி

எந்த நேரத்திலும் கல்வி தான் நம்மை காப்பாற்றும் உயர்ந்த படிப்பு தாழ்ந்த படிப்பு எதுவும் இல்லை வானபுரம் அருகே நடைபெற்ற விழாவில் இயக்குனர் நடிகருமான சமுத்திரக்கனி பேச்சு ..
Samuthirakani
Samuthirakani
Published on
Updated on
2 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஏற்பாட்டில் வாணாபுரம் அருகே உள்ள அரியலூர் அரசு மேல்நிலை பள்ளியில் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் 5000-த்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்? வாங்க பேசலாம் என்ற தலைப்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அதன்பின்னர், மாணவர்களுக்கு ஊக்கம் தரும் விதமாக திரைப்பட நடிகரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான மெர்சி விஜய், ஓய்வு பெற்ற காவல்துறை தலைமை இயக்குனரான ராஜேந்திரன், திரைப்பட நடிகரும் தேசிய விருது பெற்ற இயக்குனருமான சமுத்திரக்கனி, ஓய்வு பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கினர்.

அப்போது பேசிய தேசிய விருது பெற்ற நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி;

மாணவர்களுடன் தனது பள்ளிப் பருவத்தை நினைவு கூர்ந்தார். அப்பொழுது ஒரு முறை தான் விட்டுப் பாடம் எழுதாமல் வந்ததாகவும், பின்னர் கதையாக எழுதி எனது நோட்டை மேல்பகுதியில் வைத்தால் ஆசிரியர் பார்த்து விடுவார் என்று கடைசியாக வைத்தேன் ஆனால் வந்த ஆசிரியரோ முதலில் அதை எடுத்து எனது கதையைப் படித்து விட்டார். அதன் பின்பு அவர் அந்த நோட்டை என்னிடம் வழங்கி சத்தமாக படிக்கச் சொன்னார். பின்னர் சக மாணவர்களிடம் எனக்கு கைத்தட்ட சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார். அந்த ஆசிரியரால் தான் தற்போது இயக்குனராக வளர்ந்து உள்ளேன். நான் ஒவ்வொரு கதை எழுதும் போதும் அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு தான் எழுதுவேன் என்று கூறினார்.

செல்போனை அதிகமாக பயன்படுத்தாமல் டிஜிட்டல் காஸ்டிங் செய்ய வேண்டும் ஒரு நாள் செல்போன் இல்லாமல் இருக்க வேண்டும் என மாணவர்களிடம் கேட்டுக் கொண்டார். கல்வி நம்மை எந்த நேரத்திலும் காப்பாற்றும், நான் துணை இயக்குனராக இருந்தபோது மிகவும் கஷ்டப்பட்டேன் கையில் காசு இல்லாத நேரத்தில் எனது வீட்டு உரிமையாளரின் மகனுக்கு கணக்கு பாடம் நடத்தினேன் அதன் பின்னர் எனது வீட்டின் உரிமையாளர் என்னிடம் வாடகையே கேட்கவில்லை என்று தெரிவித்தார். படிப்பில் உயர்ந்தது தாழ்ந்தது என்று எதுவும் இல்லை.

சாட்டை படம் என்னை என்னவோ செய்தது ஒரு படம் செய்வதற்கு முன்னர் அதில் பல்வேறு ஆய்வுகளை செய்து அந்த படத்தை நாங்கள் இயக்குகிறோம், சாட்டை படம் செய்யும்போது நாங்கள் செய்த ஆய்வில் மாணவர்கள் நான்கு விதமாக Slow learners, Fast learners, Moderate learner, Learning disability இருந்தார்கள். அதே போல் ஆசிரியர்கள் இரண்டு விதமாக இருந்தார்கள், படித்த வாத்தியார், படிக்கின்ற வாத்தியார் என கூறினார்.

அதே போல் அப்பா படம் செய்யும் போதும் ஆய்வு மேற்கொண்டும் அந்த ஆய்விலும் மூன்று வகையான அப்பாக்கள் உள்ளதாக தனது அப்பா படத்தில் அதனை வைத்தே கதை எழுதியதாக அவர் கூறினார்.

மாணவர்கள் பெண்கள் மீது மரியாதை வைக்க வேண்டும், அவர்களை சக தோழிகளாக சகோதரிகளாக பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.

இறைவன் பெண்களை விட ஆண்களை பலமாக படைத்ததற்கு காரணம் ஆண்கள் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதற்கு கேட்கும் கேள்விக்கு பதில் கிடைத்தால் அது அறிவியல், கிடைக்கவில்லை என்றால் கடவுள் என கூறினார். அதே போல் செல்போன் அனைவரையும் அந்நியர் ஆக்கிவிட்டது என்று கூறினார்.....

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com