"ரூ.1500 கோடி ஊழல்.. அமைச்சர் பதவி விலக தயாரா? 'CM சார்'.. மின்வாரியத்தை அதானிக்கு விற்க திட்டமா?" - திமுக மூத்த தலைவர் சரமாரி கேள்வி!

"தமிழர்களின் உழைப்பால் வந்த மின்வாரிய சொத்தை அதானிக்கு அடிமாட்டு விலைக்கு விற்க துடிக்கும் மின்துறை அமைச்சரை வன்மையாக கண்டிப்பதோடு ! மின் வாரியத்தை அதானிக்கு விற்க மாட்டேன் என்று உத்திரவாதம் தர முடியுமா #CMsir ?"
Tamil Nadu Power Procurement Row: Appavu Questions Vijay Over ₹35 Per Unit Electricity Deal
"ரூ.1500 கோடி ஊழல்.. அமைச்சர் பதவி விலக தயாரா? 'CM சார்'.. மின் வாரியத்தை ஆதானிக்கு விற்க திட்டமா?" - திமுக மூத்த தலைவர் சரமாரி கேள்வி!AI Generated
Published on: 
Updated on: 
2 min read

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழக மின்சார துறை மீது இருந்த கேள்விகள் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன.

இந்தநிலையில் தவெக அரசு தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கும் முடிவு மற்றும் மின் வெட்டு குறித்தான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. திமுகவைச் சேர்ந்த மூத்த தலைவரும் முன்னாள் சபாநாயகருமான அப்பாவு, காட்டமான பதிவை வெளியிட்டுள்ளார்.

அவரது பதிவில், "மின்சார கொள்முதலில் ரூ.1,500 கோடிக்கு மேல் பெருமளவில் ஊழல் முறைகேடுகள் நடைபெறுவதாக நான் கூறியதற்கு பதிலாக மின்துறை அமைச்சர், நான் சோலார் பவர் கம்பேனி நடத்துவதாகவும் அதன் அனுமதிக்கு பல பேர் மூலம் அவரிடம் முயற்சி செய்ததாகவும் சொல்கிறார். அதனை அவர் நிரூபித்தால் அடுத்த நிமிடமே நான் அரசியலை விட்டு விலக தயார்! நிரூபிக்க தவறினால் அமைச்சர் பதவியை விட்டு விலக தயாரா? கேட்டு சொல்லுங்கள் CM sir?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

"தனியாருக்கு ஆதரவாக டெண்டர் - உங்களுக்கு தெரியுமா CM சார்?"

மேலும், "வழக்கமாக குளிர்காலத்தில் (Winter Season) TNEB மின் கொள்முதல் செய்வதில்லை. TNEB-க்கு நீண்ட கால ஒப்பந்தங்கள் மூலம் யூனிட் 1-க்கு ரூ.4.91 மற்றும் ரூ.5.50 விலையில் கிடைக்க வேண்டிய 2,800 MW மின்சாரத்தில் வெறும் 2,100 MW மட்டுமே வாங்கப்படுகிறது. அதானியிடம் இருந்து வர வேண்டிய 1,116 MW-ல் 550 MW வாங்க வேண்டிய குறைந்த விலை மின்சாரம் வாங்குவதை தவிர்த்துவிட்டு, யூனிட் 1க்கு ரூ.35-க்கு தனியாரிடம் மின்சாரம் வாங்கத் துடிப்பதின் நோக்கம் என்ன ? இது உங்களுக்கு தெரியுமா CM sir ?

Electricity Issue in TNEB
Electricity Issue AL Generated

அவசர மின்தேவை ஏற்பட்டால் "DAM"- (Daily Ahead Market) சந்தை மூலம் அதிகபட்சமாக யூனிட் 1-க்கு ரூ.12-க்குள் மின்சாரம் வாங்க முடியும். ஆனால், திட்டமிட்டு செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கி, தனியாருக்கு ஆதரவாக யூனிட் 1-க்கு ரூ.35 வரை கொடுத்து மின் கொள்முதல் செய்வதற்கு டெண்டர் விடப்படுவது உங்கள் அனுமதியோடு தான் நடைபெறுகிறதா CM sir?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மின்வாரிய சொத்தை அதானிக்கு அடிமாட்டு விலைக்கு விற்க துடிக்கும் மின்துறை அமைச்சர்..

அத்துடன், "உடன்குடி மற்றும் வடசென்னை அனல் மின் நிலையங்களில் சுமார் 3,900 MW வரை உற்பத்தி செய்யும் கட்டமைப்பு இருந்தும், வேண்டுமென்றே வெறும் 1,500 MW முதல் 1,800 MW மட்டுமே உற்பத்தி செய்துவிட்டு மகாராஷ்டிரா ரத்னகிரியில் இருந்து மின் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்வதின் மர்மம் என்ன CM sir?

தமிழ்நாடு மின்வாரிய சொத்துகளின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் கோடி என்றும் சந்தை மதிப்பு ரூ.50 லட்சம் கோடியாகக் இருக்கும் #TNEB சொத்தை அதானிக்கு விற்பதற்காக குளிர்காலத்திலும் அதிகமான மின் கொள்முதல் செய்து கடன் அளவை பல லட்சம் கோடி ரூபாய் செயற்கையாக உருவாக்கி, Book value-வில் மின் வாரியத்தின் மொத்த சொத்துக்களும் ஓரிரு லட்சம் கோடி ரூபாய்தான் என்று குறைத்து கணக்கிட்டு தமிழர்களின் உழைப்பால் வந்த மின்வாரிய சொத்தை அதானிக்கு அடிமாட்டு விலைக்கு விற்க துடிக்கும் மின்துறை அமைச்சரை வன்மையாக கண்டிப்பதோடு ! மின் வாரியத்தை அதானிக்கு விற்க மாட்டேன் என்று உத்திரவாதம் தர முடியுமா #CMsir ?" என்றும் முதல்வரை நோக்கி கேள்விகளை அடுக்கியுள்ளார்.

Tamil Nadu Power Procurement Row: Appavu Questions Vijay Over ₹35 Per Unit Electricity Deal
"தனுஷ் எனக்கு க்ளோஸ்தான்.. ரஜினியின் ரீச் இதுதான்!" - அதிமுக கணக்குக்கு தவெக அமைச்சர் பதில்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com