
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் தாக்குதலில் 141 பேர் பலியான நிலையில், 400 பேர் காயம் அடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. காசா, இஸ்ரேல்- காசா போர் கடந்த அக்டோபர் 7 முதல் நீடித்து வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக காசாவை சுற்றி வளைத்து தாக்கி வரும் இஸ்ரேல், பொதுமக்கள் குடியிருப்புகளின் மீதும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் குடியிருப்பு பகுதியில் நடந்த தாக்குதலில் 141 பேர் கொல்லப்பட்ட நிலையில், 400 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும், இவர்களை சேர்த்து இதுவரை காசா பகுதியில் பலியானவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்து 584 ஆக உயர்ந்துள்ளது.